PANVEL BALAGAR
தொண்டை நாட்டில் தியாகராஜர் வீற்றிருக்கும் ஏழு சிவஸ்தலங்களில் திருவொற்றியூர் தலமும் ஒன்று. இத்தலத்தில் தியாகராஜர் ஆடிய நடனம் ஆனந்த நடனம். இவர் ஆனந்த தியாகேசர் என்று அழைக்கப்படுகிறார். பிரளய காலத்தில் இந்த உலகை அழியாமல் காக்கும் பொருட்டு சிவனாரிடம் எல்லோரும் வேண்டிக் கலங்கினர். அப்போது தன் நெற்றிக் கண்ணிலிருந்து வெப்பத்தை உண்டாக்கினார். அந்த வெப்பத்தைக் கொண்டு சூழ்ந்திருந்த தண்ணீரை ஒற்றி ஒற்றி எடுத்தார் என்றும் அதனால் இந்த ஊருக்கு திரு ஒற்றியூர் என்றும் பின்னர் அதுவே திருவொற்றியூர் என மருவியதாகவும் சொல்கிறது ஸ்தல புராணம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment