PANVEL BALAGAR
Swamy saranam...Guruve saranam,,,Sri Anandavalli Samedha Agastheeswarar Temple, Panchetty.#பஞ்செட்டி இத்திருத்தலம் பிரம்மாவினால் மாமுனிவர்களான வசிஷ்டர், கவுதமர், கண்வர் ஆகியோருக்கு தவம் செய்வதற்கு ஏற்ற இடமாக காண்பிக்கப் பட்டது. அவர்கள் இங்கு தங்களின் தினசரி தவமுறைகளை கடைபிடித்தனர். அகஸ்திய முனிவரும் இங்கு தங்கியிருந்து கடைபிடிக்க வேண்டிய ஐந்து இஷ்டிகளை கடைபிடித்தார். அவைகள் தேவயக்ஞம், பித்ருயக்ஞம், பூதயக்ஞம், மானுஷ்ய யக்ஞம், பிரம்ம யக்ஞம் என ஐந்து வகைப்படும். இவையாவும் தடையறாது இங்கு நடைபெற்று வந்ததால் இந்த இடம் பஞ்சேஷ்டி (பஞ்ச + இஷ்டி) என வழங்கப்பட்டது. தற்போது பஞ்சட்டி என்றும் அழைக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment