Swamy saranam,,,,,guruve saranam....Pooja at sannidhanam 30-10-2021

 


அன்பில் சத்தியவாகீஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் என இருவராலும் பாடல்பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் அன்பிலாலந்துறை, கீழன்பில் ஆலந்துறை போன்ற புராண பெயர்களை உடையது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 57வது தலம் ஆகும். அன்பிலாந்துறை (அன்பில் ஆலாந்துறை பரணிடப்பட்டது அன்பில் சத்தியவாகீசுவரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், அப்பர் பாடல்பெற்ற சிவஸ்தலம்.

#திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 50வது தலம் ஆகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஆபத்சகாயர். தாயார் பெரிய நாயகி. இச்சிவாலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பழனம் எனும் ஊரில் அமைந்துள்ளது. திருவையாறுக்குக் கிழக்காக 3 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு சிவன் தாந்தோன்றியாய் சுயம்பு மூர்த்தியாக தோன்றுகிறார் என்று நம்பப்படுகின்றது.
#திருவையாறு ஐயாறப்பர் கோயில் திருவையாற்றில் காவிரி கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும் . இக் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 51வது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஐயாறப்பர், தாயார் தரும சம்வர்த்தினி.


Swamy saranam...Guruve saranam..

 #திருமுக்கீச்சரம் (உறையூர், பஞ்சவர்ண சுவாமி கோயில்)

இறைவர் : ஐவண்ணர், பஞ்சவர்ணேசுவரர்
இறைவி : காந்திமதி
பெரிய கோயில். வெளியே மொட்டைக் கோபுரம். உள்ளே 3 நிலைக் கோபுரம். சோழமன்னர்கள் முடிசூடிக்கொள்ளும் 5 நகரங்களில் இதுவும் ஒன்று. நடராஜர் சந்நிதிக்கு நேரே புகழ்ச்சோழ நாயனார் திருமேனி உண்டு. அவருடைய தலம். கோச்செங்கட்சோழ நாயனாரும், புகழ்ச்சோழ நாயனாரும் வீடுபேறு அடைந்த தலம். மூவேந்தர்களும் சேர்ந்து தொழுத சிறப்புடைய திருப்பதி. உதங்க முனிவருக்கு 5 காலங்களில் 5 வர்ணமாகக் காட்சி கொடுத்தார். யானைக்கோழி சண்டையிட்டு வென்றமையால் இத்தலத்துக்கு கோழியூர் என்றும் பெயருண்டு.

#வயலூர் சுப்பிரமணியசுவாமி

உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இது தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரதும் பாடல் பெற்ற சிறப்புப் பெற்றது. நந்திவர்ம பல்லவனால் அமைக்கப்பட்ட இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள நான்காவது சிவத்தலமாகும்.

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழ நாட்டு காவிரி ஆற்று கரையில் அமைந்துள்ள முதல் திவ்ய தேச தலம்.

திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60வது சிவத்தலமாகும்.

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். மூலவர் ஞீலிவனேஸ்வரர் என்றும், தாயார் விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி என்றும் அழைக்கப்பெறுகிறார். இத்தலத்தில் 7 தீர்த்தங்கள் மற்றும், கல்வாழை தலவிருட்சமாக உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 61வது சிவத்தலமாகும்.


எண்ணத்தை ஈடேற்றித் தரும் காவிரி துலா ஸ்நானம்; புண்ணியமும் பித்ரு ஆசியும் தரும் துலா ஸ்நானம்