Swamy saranam,,,,,guruve saranam....Pooja at sannidhanam 30-10-2021

 


அன்பில் சத்தியவாகீஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் என இருவராலும் பாடல்பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் அன்பிலாலந்துறை, கீழன்பில் ஆலந்துறை போன்ற புராண பெயர்களை உடையது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 57வது தலம் ஆகும். அன்பிலாந்துறை (அன்பில் ஆலாந்துறை பரணிடப்பட்டது அன்பில் சத்தியவாகீசுவரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், அப்பர் பாடல்பெற்ற சிவஸ்தலம்.

#திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 50வது தலம் ஆகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஆபத்சகாயர். தாயார் பெரிய நாயகி. இச்சிவாலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பழனம் எனும் ஊரில் அமைந்துள்ளது. திருவையாறுக்குக் கிழக்காக 3 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு சிவன் தாந்தோன்றியாய் சுயம்பு மூர்த்தியாக தோன்றுகிறார் என்று நம்பப்படுகின்றது.
#திருவையாறு ஐயாறப்பர் கோயில் திருவையாற்றில் காவிரி கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும் . இக் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 51வது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஐயாறப்பர், தாயார் தரும சம்வர்த்தினி.


No comments:

Post a Comment