sWAMY SARANAM...GURUVE SARANAM...

 #சிம்ஹாசலம்

சிம்ஹகிரி என அழைக்கப்படும் சிறிய மலை மீது அமைந்திருக்கும் ஸ்ரீ வராஹ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி குடிகொண்டிருக்கும் சிம்ஹாசலம் தான் இந்தப் பயணத்தில் நாங்கள் இன்று சென்ற முதல் இடம். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கோவில் என சில தகவல்கள் உண்டு.
மஹாராஜா கிருஷ்ணதேவராயர் காலத்தில் இக்கோவிலுக்கு செய்த தானதர்மங்கள், இறைவனுக்கு அணிவித்த நகைகள், நிவந்தங்கள் என பல தகவல்கள், கல்வெட்டுகள் உண்டு.
திருப்பதி கோவிலுக்கு அடுத்தபடியாக, அதிக வருமானம் வரும் கோவில் இந்த சிம்ஹாசலம். கோவிலுக்குள்ளே கேமரா, மொபைல் போன்ற எதுவும் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
கைலாசகிரி மலையுச்சியிலிருந்து கடல்....
சிம்மாசலக் கோவிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் கடலருகே அமைந்திருக்கும் கைலாச கிரி! 360 அடி மலை உச்சியிலிருந்து கடற்கரை, விசாகப்பட்டினம் நகரம் ஆகிய இரண்டையும் கழுகுப் பார்வையில் பார்க்க ஒரு சிறப்பான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்க இந்த கைலாச கிரி மலைக்குச் செல்லலாம். விசாகப்பட்டினம் வரும் அனைத்து சுற்றுலா பயணிகள் தவிர, பெரும்பாலான விசாகப்பட்டின நகரவாசிகளும் தங்களது மாலைப் பொழுதுகளை இனிமையாகக் கழிக்க தேர்ந்தெடுக்கும் இடம் இந்த கைலாச கிரி. அழகிய பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டு வசதிகள் மலையைச் சுற்றிவர ஒரு சிறு இரயில் வண்டி, என பல விஷயங்கள் இங்கே மக்களை மகிழ்ச்சிப்படுத்த அமைத்திருக்கிறார்கள்.
கைலாசகிரி மலையுச்சியில் சிவனும் பார்வதியும்....
இந்த மலையில் அமைத்திருக்கும் இன்னுமொரு விஷயம் இரண்டு சிலைகள்! – சிவன் மற்றும் பார்வதி தேவியின் பெரிய அளவு சிலைகள் அங்கே வைத்திருக்கிறார்கள்! கைலாச பர்வதத்தில் இப்படித்தான் அமர்ந்திருப்பார்களோ! – இந்த மலைக்குக் கூட கைலாச கிரி என்ற பெயர்தானே வைத்திருக்கிறார்கள்! இந்த மலையுச்சிப் பூங்காவிற்கு வருவதற்கு ஒரு சாலையும் உண்டு. சாலை வழியாக பயணிக்க முடியும் என்பது தவிர, கேபிள் கார் மூலமாகவும் நாம் மலையுச்சியை அடையலாம்!

No comments:

Post a Comment