#சுருட்டபள்ளி
PANVEL BALAGAR
Swamy saranam...guruve saranam...today pooja at sannidhanam 29-1-22
Swamy saranam...guruve saranam....
பாடல் பெற்ற சிவாலயம் ;;காளையார் கோவில்
புராணப்பெயர் ;திருக்கானப்பேர்
மூலவர்;சொர்ணகாளீஸ்வரர், சோமேசர், சுந்தரேசர்
தாயார்;சொர்ணவல்லி, சவுந்தரவல்லி, மீனாட்சி
தல விருட்சம் ; மந்தாரை
தீர்த்தம் ; கஜபுஷ்கரணி, சிவகங்கைக்காளி, விஷ்ணு, சரஸ்வதி, கௌவுரி, ருத்ர, லட்சுமி, சுதர்சன தீர்த்தங்கள்.
பாடல் வகை ; தேவாரம்
பாடியவர்கள் ; சம்பந்தர், சுந்தரர்
தலவரலாறு
ஒரு முறை சுந்தரமூர்த்தி சுவாமிகள், விருதுநகரில் உள்ள திருமேனிநாதரை வழிபட்டு இந்த வழியாக வந்தார். அப்போது சொர்ணகாளீஸ்வரரை வணங்க நினைத்தார். ஆனால் வழி எங்கும் சிவலிங்கமாக தென்பட்டதால் அவரால் உள்ளே சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை. இதனால் இறைவனை நினைத்து வேண்டினார். தன் நண்பன் மீது இரக்கம் கொண்ட ஈசன், காளையை அனுப்பினார். அது ஆலயத்தில் இருந்து ஓடி வந்து, சுந்தரமூர்த்தி நின்றிருந்த இடம் வரை வந்து விட்டு, மீண்டும் ஆலயம் சென்றது. காளை வந்த வழித்தடத்தில் சிவலிங்கம் இல்லை என்பதை உணர்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், அதன்வழியே சென்று இறைவனை தரிசித்தார். காளை வழிகாட்டியதால், இதற்கு ‘காளையார்கோவில்’ என்று பெயர் வந்தது.
இந்திரனின் வாகனமான ஐராவத யானை, மகரிஷி ஒருவரால் தரப்பட்ட பிரசாத மாலையைத் தரையில் வீசி எறிந்தது. இதனால் சாபம் பெற்ற ஐராவதம் யானை, சாப நிவர்த்திக்காக இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தது. மனிதர்களின் பார்வை இந்த யானை மீது படக்கூடாது என்பது விதி. ஆனால், ஒருமுறை ஒரு மனிதன் அந்த யானையைப் பார்த்து விட்டான். இதனால், அந்த யானை தன் தலையால் பூமியை முட்டி பாதாளத்துக்குள் சென்றுவிட்டது.
யானை முட்டிய பள்ளத்தில் தண்ணீர் பெருகி, ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு “யானை மடு" என்று பெயர்.
ஆலய அமைப்பு
சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் 157 அடி உயரம் கொண்ட 9 நிலை இராஜகோபுரம் மற்றும் 5 நிலை கொண்ட மற்றொரு ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்த பிரம்மாண்டமான ஆலயம்.
இரண்டு பிரகாரங்களைக் கொண்ட இக்கோவில் மூன்று இறைவன் சந்நிதிகளைக் கொண்டு விளங்குகிறது. இறைவன் சந்நிதிகள் மூன்றும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இறைவி சுவர்ணவல்லி சந்நிதி சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மற்ற இரண்டு அம்பாள் சந்நிதிகளும் தெற்கு நோக்கி அமைந்துள்ளன.
காளீஸ்வரர் சந்நிதியிலுள்ள கருவறை லிங்கம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இங்குள்ள அம்மன் சொர்ணவல்லி ஆவார். சோமேஸ்வரர் சந்நிதிக்கு எதிரிலுள்ள இராஜ கோபுரம் மருது சகோதரர்களால்க ட்டப்பெற்றதாகும் சோமேஸ்வரர் ஆலயத்தின் அம்மன் சௌந்திர நாயகி எனப்படுகிறார். இவ்வம்மனின் கருவறை சிற்ப
வேலைப்பாடு மிக்கதாகும்.
சோமேஸ்வரர் – சௌந்தரநாயகி :
மூன்று சதாசிவ மூர்த்தங்களில் இவரே பெரிய தோற்றப் பொலிவோடு திகழ்பவர். பிரம்மா, குபேரன்,சந்திரன் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட சோமேஸ்வரர் ஸ்தாபகலிங்கம் ஆகும். ராஜகோபுரம் வழியாக உள்நுழையும் போது இடது பக்கத்தில் இந்திரனால் பூஜிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட சகஸ்ரலிங்கம் அமைந்துள்ளது.
நந்திகேஸ்வரரையும், கொடிமரத்தையும் தாண்டி உள்ளே சென்றதும் மூலவர் கிழக்கு நோக்கி லிங்க வடிவில் காட்சி தருகிறார். பிரகாத்தில் சூரியன், தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், விநாயகர் இருவர், சுகந்தவனப்பெருமாள், விசுவநாதர், லிங்கோத்பவர், வீரபத்திரர்,
சப்தமாதர், கெஜலட்சுமி, சுப்பிரமணியர், பிரம்மா, நடராஜர், சண்டீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சந்திரன் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.
சோமேசர் சன்னதிக்கு வலது பக்கம் அமைந்திருப்பது சௌந்தரநாயகி அம்மனின் சன்னதி. கருவறை மண்டப திருச்சுவரினை இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்திகள் அலங்கரிக்கிறார்கள்.
சொர்ண காளீஸ்வரர் – சொர்ணவல்லி :
உமாதேவிக்கு அருள்பாலிக்க இறைவன் தானே சுயம்புலிங்கமாக எழுந்தருளியவரே சொர்ண காளீஸ்வரர். சௌந்தரநாயகி சன்னதிக்கு அடுத்து அமைந்து இருப்பது சொர்ணகாளீஸ்வரர் சன்னதி. இது இரண்டு பிரகாரத்துடன் கூடியது. கொடிமரம், நந்தீஸ்வரர் தாண்டி உள்ளே முதலில் அதிகார நந்தி, வல்லப கணபதி, நால்வர், அறுபத்து மூவர், பைரவர், சப்தமாதர், விநாயகர், சந்திரசேகரர், பஞ்சலிங்கங்கள், அஷ்டலட்சுமிகள், செந்தில் முருகன், அவரைத் தொடர்ந்து வருணனால் பூஜிக்கப்பட்ட வருணலிங்கம், நடராஜர், பைரவர் சன்னதிகள் உள்ளன.
சுந்தரேஸ்வரர் – மீனாட்சி அம்மன் :
வேட்டைக்கு வந்த வரகுண பாண்டியன் இரவு மதுரைக்குத் திரும்ப முடியாமல் தவித்ததால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அவருக்காக திருக்கானப்பேரில் வந்து காட்சி கொடுத்த அதிசயத்தை நினைவு கூறும் வண்ணம் எழுப்பப்பட்டது சுந்தரேஸ்வரர் மீனாட்சி கோவில் ஆகும்.
காளீஸ்வரர் சன்னதிக்கும்,சொர்ணவல்லி சன்னதிக்கும் இடையில் அமைந்திருப்பது சுந்தரேஸ்வரர் – மீனாட்சி திருக்கோவில். இங்கு பரிவார தேவதைகள், தனி சன்னதியில் நடராஜர், நவக்கிரகங்கள் அனைவரும் அருள் பாலிக்கின்றனர்.
சுவாமி சன்னதியை நோக்கியவாறு பிரகாரச் சுவரில் வரகுண பாண்டியன் கூப்பிய கரங்களுடன் நிற்கிறார். சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள், பெரிய கோபுரம், மண்டபங்கள் கொண்ட, சன்னதிகள் கொண்ட அழகிய ஆலயம்.
அமைவிடம்
சிவகங்கையில் இருந்து 16 கி.மீ தொலைவில்தொண்டி செல்லும் சாலையில் உள்ளது இவ்வாலயம். பேருந்து வசதி உள்ளது.
ஆலய முகவரி
அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோவில், சிவகங்கை மாவட்டம், 630 551.
இவ்வாலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
சிறப்பு;மூன்று சிவன், மூன்று அம்பாள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கும் ஆலயம்.
சகஸ்ரலிங்கம் (ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம்) உள்ள தலம். தங்கத்தால் ஆன பள்ளியறை உள்ள ஆலயம். இராமபிரான் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட தலம்.இத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி.
சொர்ணகாளீஸ்வரரை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.இந்திரன், தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்க வழிபாடு செய்த தலங்களில் ஒன்று.
காளீஸ்வரர் – சுயம்புலிங்கம்
சேமேசலிங்கம், சகஸ்ரலிங்கம், வருணலிங்ம் – திவ்ய லிங்கம்
சுந்தரேஸ்வரர் – மானுட லிங்கம்
சோமேசர் – ஆர்ஷ லிங்கம்
மருதுபாண்டிய சகோதரர்களைக் கைது செய்ய எண்ணிய ஆங்கிலேயர், அவர்கள் வந்து சரணடையாவிட்டால் இந்த பெரிய கோபுரத்தை இடித்துவிடப் போவதாகப் பறை சாற்றினர். காட்டில் திரிந்து வாழ்ந்து கொண்டிருந்த மருதுபாண்டியர் இதையறிந்து கோபுரத்தைக் காக்க விரும்பி தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் வந்து சரணடைந்து, பின்னர் வெள்ளையரால் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்றனர்
Swamy saranam..guruve saranam..today 22-1-22 pooja at sannidhanam
ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதசுவாமி கோயில் கருவறையில் உள்ள மணலால் ஆன மூலவர் ராமநாதசுவாமி சீதா தேவியால் கடற்கரை மணலிலே உருவாக்கபட்டு ஸ்ரீராமரால் வழிபாடு செய்யப்பட்ட சிவலிங்கமாகும்.
Swamy saranam..guruve saranam...today pooja at sannidhanam 21-1-22
ஓம் நமோ நாராயணா
Swamy saranam.guruve saranam....today pooja at panvel sannidhanam 20-1-22
SWAMY SARANAM...GURUVE SARANAM..TODAY POOJA AT SANNIDHANAM 19-1-22
Swamy saranam..guruve saranam...pooja at panvel sannidhanam today 18-1-22
Swamy saranam..guruve saranam...today pooja at panvel sannidhanam 17-1-22
சித்தர் ஜீவ சமாதியும்.... பிரச்சனை தீர வழிபிறப்பும்...