Swamy saranam...guruve saranam...today pooja at sannidhanam 15/2/22

 



#ஈசானலிங்கம் – சின்னகோலடி (வட கிழக்கு )
வேதபுரீஸ்வரர் சன்னிதிக்கு வடகிழக்கு திசையில், சுந்தர சோழபுரத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் திருவேற்காடு- கோலடி சாலை சுற்றுப்பாதையில் வலப்புறமாக இந்த கோவில் இருக்கிறது. பார்வதி தேவி சமேத ஈசான லிங்கம் இதுவாகும். பெரிய பாணலிங்க வடிவில் அருள் புரியும் ஈசானிய லிங்க சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால், காரியத் தடை, கண் திருஷ்டி நீங்கும்.


குபேரலிங்கம் – சுந்தரசோழபுரம் (வடக்கு )
ஆவடி-திருவேற்காடு சாலையில், சுந்தரசோழபுரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இத்தல இறைவன், வேம்புநாயகி சமேத குபேரீஸ்வரர். கி.பி.11-ம் நூற்றாண்டில் சுந்தரசோழன் ஆட்சி செய்த காரணத்தால், இந்த ஊர் சுந்தர சோழபுரம் என்று அழைக்கப்படுகிறது. வேம்புநாயகி சமேத குபேரலிங்கேஸ்வர் இவரை வணங்கினால் வாழ்வில் எல்லா வித பொருளாதார மற்றும் வெற்றிகளை பெறலாம் .


No comments:

Post a Comment