Swamy saranam...guruve saranam...வடநாட்டு யாத்திரையில் திரிவேணி ...... ...... அலகாபாத் பெயர் இப்பொழுது பிரயாகராஜாக மாறி விட்டது.இங்கு மிகவும் முக்கியமானது திரிவேணி சங்கமம் ஆகும்.கங்கை,யமுனை மற்றும் கண்ணுக்கு தெரியாத சரஸ்வதி நதிகள் சேரும் இடம் சங்கமம் ஆகும்.சங்கமத்துக்கு செல்ல, யமுனை நதியின் கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் படகில் செல்ல வேண்டும்.கங்கை நீர் செம்மண் நிறத்திலும் யமுனை நீர் நீல நிறத்திலும் கலப்பதை காணலாம். அங்கு ஆற்றில் இறங்கி குளித்து விட்டு திரும்பி வரும்போது மறக்காமல் கங்கையில் தண்ணீரை பாட்டிலில் எடுத்து வரலாம் .அதுவே கங்கா தீர்த்தமாகும்.

 

காசி பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் கங்கை நதியானது, புனிதத்துவம் வாய்ந்தது. இந்தப் புனித நதியில் 64 தீர்த்தக் கட்டங்கள், அதாவது நீராடல் துறைகள் அமைந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் புனிதம் மிக்கவையே. இந்த நீராடல் துறைகளை, அங்குள்ளவர்கள் ‘காட்’ கட்டம் என்று கூறுகிறார்கள். அந்த 64 நீராடல் துறைகளை பார்ப்போம்.
அசி சங்கம காட், துளசிதாச காட், பார்சுவநாத காட், நிரஞ்சன காட், அனுமந்த காட், இலல்லி காட், ராணி காட், சவுகி காட், சேட்சமேஸ்வர காட், நாரத காட், பாண்டேய காட், தண்டி காட், முன்ஷி காட், சீதளா காட், தசாசுவமேத காட், கிடிகீ காட், திரிபுரசுந்தரி காட், ஜராசந்தேஸ்வர காட், லோலார்க் காட், ஜானகி காட், சிவாலய காட், பிரமேந்திர காட், அரிச்சந்திர காட், சிந்தாமணி காட், கேதார காட், ருக்மாங்கத காட், மானசரோவர காட், அன்னபூரணா காட், சதுர்ஷஷ்கை காட், ராணாமகால் காட், அகல்யாபாய் காட், பிரயாக காட், அசுவ காட், மான்மந்திர காட், விசாலாட்சி காட், லலிதா காட், கங்காகேசவ காட், மகாமயான காட், மணிகர்ணிகா காட், சேந்திப காட், யமேஸ்வர காட், அக்னீஸ்வர காட், லட்சுமணபாலா காட், பஞ்சகங்கா காட், துர்க்கா காட், சத்திர காட், லால் காட், நாராயண காட், பிரகலாத் காட், கட்கவிநாயக காட், பிரம்மநாள் காட், சித்தி விநாயக காட், தத்தாத்ரேய காட், சங்கடாதேவி காட், கங்காமகால் காட், ராமா காட், மங்களாகவுரி காட், பிந்துமாதவ காட், பிரம்ம காட், ராஜமந்திர காட், கவ் காட், திரிலோசனேஸ்வர காட், ராஜ காட், வருணசங்கமா காட்.

பிந்துமாதவர் கோயில் வாரணாசி


No comments:

Post a Comment