sWAMY SARANAM,,,GURUVE SARANAM.. TODAY POOJA AT SANNIDHANAM

 



#திருவடிசூலம்
திருவடிசூலம் என்னும் மிக அழகிய குக்கிராமத்தில் இறங்குங்கள். 2 கிலோமீட்டர் நடக்க வேண்டும். வழியில்
மிகப் பழமையான திருஞானசம்பந்தரால்
பாடல் பெற்ற தொண்டை
நாட்டுத் திருத்தலமான இடைச்சுரநாதர் (சிவன்) ஆலயம் வரும். இவரையும்
அம்பாளையும் தரிசித்து விட்டு இடது புறமாக மறுபடியும் நடங்கள். மலை ஒன்று ஆரம்பமாகும். அப்படியே வலது புறம் திரும்பி நடங்கள். நீங்கள் 7 அழகிய மலைகளைக்
காண்பீர்கள். உங்கள் கண்களுக்கு இரு
சிறிய கோயில்கள் தென்படும். இடது
புறமாக ஒரு சாலை பிரியும். அதைப் பின்பற்றிச் சென்றீர்கள் என்றால்...
உலகிலேயே மிக உயரமான (51 அடி)
அற்புதமான கருமாரி
அம்மனைத் தரிசிக்கலாம். அப்படி ஒரு அழகு, தெய்வாம்சம், காணக் கண்கள் கோடி
வேண்டும். மிகவும் விஸ்தாரமான இயற்கை எழில் கொஞ்சும்
அழகுள்ள இடத்தில் இந்த கருமாரி
வீற்றிருக்கிறாள். நீங்கள் உங்களையே
மறந்துவிடுவீர்கள்.
கருமாரி அன்னையின் பின்புறமே அவர்
அண்ணன் பெருமாள் ஸ்ரீநிவாசனாக மிகப் பெரிய அளவில்
வீற்றிருக்கிறார். திருப்பதி சென்று
சரியாகக் கடவுளை காண முடியாத
ஏக்கத்தில் இருப்பவர்கள் இங்கே சென்னைக்கு அருகிலேயே, செங்கல்பட்டிலிருந்து ஒரு 10 கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த அதி அற்புத தரிசனம் செய்யலாம். அண்ணனையும், தங்கையையும் ஒரு சேரக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
இவர்கள் இருவரையும் தரிசித்து விட்டு, இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் அஷ்டபைரவர் கோயிலைப் பார்க்காலாம். இங்கே உலகத்தில் வேறெங்கும் காணமுடியாத மிகப்பெரும் கோயிலினுள் அஷ்டபைரவர்களை தரிசிக்கலாம்.
அரவவமற்ற பகுதி என்பதால் காலையில் சென்று மதியமோ அல்லது மாலை இருட்டுவதற்குள் திரும்பி வந்து விடுவது போல் உங்கள் பிரயாணம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
சைவமும், வைணவமும் ஒன்றாக கலந்து ஒரு சுற்றுலா சென்ற மகிழ்ச்சியும் கிடைக்கும்...
🙏🙏🙏🙏🙏
30


No comments:

Post a Comment