swamy saranam...guruve saranam...today pooja at sannidhanam 25-12-2021

 


Had a Great Dharshan.Arunachaleswarar Temple #Thiruvannamalai

SWAMY SARANAM....GURUVE SARANAM....

 சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த பெரும் புனிதமான புராதனமான திருத்தலம், திருவெண்ணெய்நல்லூர்.

ஒருமுறை திருக்கயிலாயத்தில், பளிங்கு போல் காட்சியளித்த பனிப்படலத்தில் தன் கண்களைத் திறந்து நோக்கினார், சிவபெருமான். அதில் அவரது பிம்பம் தெரிந்தது. தன் எதிரில் பிரதிபலித்த அந்த பிம்பத்தின் அழகில் மயங்கிய ஈசன், அதை நோக்கி “சுந்தரா வா” என்றார். உடனே அந்த பிம்பம் உயிர் பெற்று, சிவபெருமானை நோக்கி வந்தது. அவருக்கு சுந்தரர் என்று பெயரிட்டு, அணுக்கத் தொண்டராய் அருகில் அமர்த்திக் கொண்டார் சிவன்.

திருப்பாற்கடல் கடைந்தபோது, அதில் இருந்து வெளிப்பட்ட ஆலகால விஷத்தை, பந்து போல உருட்டி சிவபெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தவர், சுந்தரர்தான். அதனால்தான் அவரது பெயர் ‘ஆலால சுந்தரர்’ என்றானது.

சிவபெருமான் சாப்பிட்ட விஷம் அவரது கழுத்தில் நின்றது. அது வெம்மையை தராமல் இருக்க, பெண்ணை ஆற்றின் கரையில் பசுவின் வெண்ணெயால் கோட்டை அமைத்து, அதனுள் பஞ்சாக்கினி வளர்த்து, அதன் நடுவில் தவம் இயற்றினார். அந்த திருத்தலமே ‘திருவெண்ணெய் நல்லூர்’ என்றானது.












SWAMY SARANAM.. GURUVE SARANAM.....POOJA AT SANNIDHANAM

 



#திருவாமத்தூர்
நடுநாட்டு தேவாரபாடல்பெற்ற சிவஸ்தலங்களில் முதலாவதாக தரிசனம் செய்ய ஸ்தலம் திருவாமத்தூர்.
ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பில்லாமல் படைக்கப்பட்டிருந்தன. தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் சிங்கம், புலி முதலிய மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட்டன. நந்திதேவரும் அவைகள் வேண்டுவது சரியே என்று கூறி பம்பை நதிக்கரையிலுள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறினார். அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன. ஆக்கள் (பசுக்கள்) பூஜித்த காரணத்தால் இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது. இந்த திரு ஆமாத்தூர் தலத்தை யார் புகழ்ந்து பேசினாலும் அல்லது மற்றவர்கள் புகழக் கேட்டாலும் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று தல புராண வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் உள்ள சிவாலயம் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்புடையது.
அபிராமேஸ்வரர் என்றும் அழகிய நாதர் என்றும் வழங்கும் இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு மூர்த்தியாவார். பசுக்கள் பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திரனின் பிறை போல் வளைந்து பசுவின் கால் குளம்பின் சுவடு தென்படுகிறது. இறைவன் சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படுகிறார். மூலவர் சந்நிதியும் இறைவியின் சந்நிதியும் ஒன்றையொன்று எதிர் நோக்கியவாறு அமைந்துள்ளது. அம்பிகையின் ஆலயத்திற்குப் பெரிய கோபுரம் உண்டு. ஆலயம்இரண்டு பிரகாரங்கள் கொண்டது. அச்சுதராயர் என்றவர் இந்த ஆலயத் திருப்பணி செய்தவர்களில் முதன்மையானவர். அவரின் சிலை முதல் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கிறது. இரண்டாம் பிரகாரத்தில் இராமர், முருகன், திருமகள் ஆகியோர் சந்நிதிகள் இருக்கின்றன. மதங்க முனிவரால் உருவாக்கப் பெற்ற தீர்த்தம் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது. இதில் நீராடாமல், நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டாலே சிவபுண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.
வட்டப் பாறை: அம்பிகை சந்நிதியின் பிரகாரச் சுற்றில் தென் புறம் ஒரு வட்டப் பாறை இருக்கிறது. அருகில் ஒரு சிவலிங்கம் உள்ளது. இராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் இராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்பு கொண்டபோது இந்த வட்டப் பாறை முன் உடன்பாடு செய்துகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. ஊரில் உள்ள எல்லோரும் வட்டப் பாறையின் மீது கை வைத்து சத்தியம் செய்து தங்கள் வழக்குகளை தீர்த்துக் கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இந்த வட்டப் பாறை ஒரு சிறிய சந்நிதி. இதன் முன் பொய் சொல்வோர் மீளாத துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று ஐதீகமுண்டு.
தேவார மூவர் என்று எல்லோராலும் போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் திரு ஆமாத்தூர் தலமும் ஒன்றாகும்.







 #ஏன்சபரிமலைஒரு_

#வித்தியாசாமான #வழிபாட்டு_ஸ்தலம்???


தகவல்களை தொகுத்து இருக்கிறேன்.


1. உலகின் புனிதப் பயணங்களில் 

வருடம் தோறும்  சுமார்  40-50 

மில்லியன்  பக்தர்களை  கொண்டு 

#மெக்காவிற்கு அடுத்த படியாக 

அதிகம் பயணப்படுகிற இடம் 

#சபரிமலை .


2. சைவம் மற்றும் வைணவ 

பிரிவுகளின் ஒற்றுமை உருவமாக 

பார்க்கப்படுகிற  புண்ணிய  கோவில் 

#சபரிமலை 


3. #மதுரையில் இருந்து தன் சொந்த 

அமைச்சர்களால் உயிருக்கு ஆபத்து 

என கருதி சென்ற  ராஜசேகர 

பாண்டியன் திருவிதாங்கூர் 

மன்னனால் உதவப்பட்டு பந்தள 

தேசத்து மன்னனாக ஆட்சி செய்தான். 

அவனின் வளர்ப்பு மகனே #ஐயப்பன் 

(1194AD)


4. ராஜசேகர பாண்டியன்  பம்பை 

நதிக்கரையில்  வேட்டையாட 

சென்றபோது கண்டெடுத்த கடவுள் 

அவதாரமே குழந்தை மணிகண்டன் 

#ஐயப்பன்


5. 12 வயது வரை மணிகண்டன்  

மனித உருவமாக வளர்ந்து  தன 

அவதார நோக்கம் முடிந்த உடன் 

தியானம் செய்ய சென்ற இடமே 

இன்றைய #சபரிமலை .


6. பந்தள வம்சத்தை சார்ந்த நபர்கள் 

இன்றும் சபரிமலை செல்வதில்லை. 

தன் தந்தை ராஜசேகர பாண்டியன் 

சபரிமலை வந்தால் ஐயப்பன் எங்கு 

எந்தித்துவிடுவாரோ  என்று அவர் 

கால்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. 

அதனால் தான் அந்த ஐதீகம் இன்றும் 

கடைபிடிக்கப்படுகிறது. 


7. பந்தள மன்னர் ராஜசேகர 

பாண்டியன் தன் வளர்ப்பு குழந்தை 

ஐயப்பனுக்காக செய்ததே 

திருவாபரண பெட்டி.. இதில் 

தங்கத்தில் சிறிய வடிவில் 

புலி,யானை, வாள், மாலை 

போன்றவை உள்ளன.. ஓலை 

சுவடிகளை இன்றும் காணலாம்.


8. ராஜசேகர பாண்டியன் தன் 

மனைவி தலைவலி என்று சொல்லி 

புலியின் பாலை அடர்ந்த காட்டிற்குள் 

ஐயப்பனை கொண்டு  வர 

சொன்னபோது இரண்டு 

முடிச்சுக்களில் பாதுகாப்பிற்கு 

தேவையான பொருட்களை 

கொடுத்து அனுப்பியதே இன்று 

இருமுடியாக ஐயப்ப பக்தர்கள் 

பின்பற்றுகின்றனர்.


9. இந்தியாவில் கோவில் 

வளாகத்தில் (சன்னிதானத்தில்) 

#அரேபியமுஸ்லிம்வாவர் சுவாமியாக காட்சி அளிப்பது 

சபரிமலையில் மட்டுமே.. வாவர் 

ஐயப்பனின் நெருங்கிய நண்பர்.. 

இந்த சன்னதியின் பூஜைச்சடங்குகள் 

முஸ்லிம் அர்ச்சகர்களால் 

செய்விக்கப்படுகிறது.மத 

#நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டு.


10.#ஹரிவராஸனம் 

#விச்வமோஹனம் என்ற புகழ்பெற்ற  

கே ஜே யேசுதாஸ் பாடிய பாடலே 

நடை அடைப்பில் ஐயப்பன் 

உறங்குவதற்காக 

இசைக்கப்படுகிறது. இந்த பாடலை 

எழுதியவர் கம்பங்குடி 

ஸ்ரீகுளத்துஐயர்.இவர் பூர்வீகம் 

திருநெல்வேலி மாவட்டம் 

கல்லிடைக்குறிச்சி


11. #Memoir_of_the_survey_of_Travancore 

#and_Cochin_states என்ற ஆங்கிலேயர் 

1894 ல் எழுதிய புத்தகத்தில் 

சபரிமலைக்கு செல்வோர் அப்போதே 

ஆண்டு தோறும் 15000 என்று 

குறிப்பிட்டு இருக்கிறார். 

அப்போதைய மக்கள்தொகை தென் 

இந்தியாவில் 5 கோடிக்கும் கீழ்.


12. பரசுராமரால் பிரதிஷ்டை 

பண்ணப்பட்ட  ஐயப்பன் சிலை 1950 

ல் தீவிபத்தில் சேதம் அடைந்தது. 

இன்று அந்த சிலை உருக்கபட்டு 

கோவில் மணியாக கொடி மரம் 

அருகே காட்சி அளிக்கிறது. 


13. தீவிபத்தை  தொடர்ந்து சிலையை 

யார் செய்ய வேண்டும் என்ற 

தேவபிரசன்ன குடவோலை 

முறைப்படி, ஐயப்பன் சந்நிதியில் 

சீட்டுப் போட்டு பார்க்கப்பட்டது. அதில் 

மதுரை நவாப் ராஜமாணிக்கம் 

பிள்ளையும் பி.டி.ராஜனும் பெயர்கள் 

வந்தன. அவர்கள் வழங்கிய 

விக்கிரகத்தைத்தான் இன்றைக்கும் 

தரிசித்துக் கொண்டிருக்கிறோம். 

அந்த சிலை கும்பகோணத்தில் 

அடுத்த சுவாமிமலையில் தேசிய 

விருது பெற்ற சிற்பக்கலைஞர் 

ராமசாமி ஸ்தபதியால் 

செய்யப்பட்டது. 


14. கேரளாவில் கோயில்களில் 

பராமரிப்பு பணிகளோ, முக்கிய 

மாற்றங்களோ நடத்த வேண்டும் 

என்றால் கடவுளிடம் அனுமதி 

கேட்பதற்காக ‘தேவபிரசன்னம்’ என்ற 

பூஜை நடத்தப்படுவது வழக்கம். 

அதன்படியே இன்றும் சபரிமலையில் 

பெண்கள் அனுமதிக்கப்பட 

வேண்டுமெனில் தேவபிரசன்னம் 

செய்யப்பட்டு கடவுளின் அனுமதி 

பெற வேண்டும் என்பது கோவில் 

நிர்வாகத்தின் முடிவு. 


15. Kamakhya Temple (Guwahati, Assam), 

Lord Kartikeya Temple (Pehowa, Haryana 

and in Pushkar, Rajasthan) Haji Ali Dargah 

(Mumbai, Maharashtra) Mangal Chandi 

Temple, (Bokaro, Jharkhand) Sree 

Padmanabhaswamy Temple 

(Malayinkeezhu, Kerala) Patbausi Satra 

(Barpeta, Assam) Jain Temple (Ranakpur, 

Rajasthan) போன்ற கோவில்களை 

போல சபரிமலையும் பெண்களை 

அனுமதிப்பதில்லை . 


16. ஐயப்பனை  சாஸ்தாவாக 

வழிபடும் முறை தமிழகத்தில் 

இருப்பதே. முக்கியமாக தென் 

மாவட்டங்களில் அய்யனார்  வழிபாடு 

மிக பிரபலம். அதில் #ஆதி 

#சாஸ்தாவாககாட்சிஅளிக்கும் #இடமே 

#சொரிமுத்துஅய்யனார்கோவில் 

#பாபநாசம், 


17. விரத முறையில் உணவை உண்டு 

அன்னதானம் செய்ய வேண்டும் 

என்பது சபரிமலை யாத்திரையில் 

மட்டுமே.  மற்ற முறைகளில் விரதம் 

என்றால் உணவை உட்கொள்ளாமல் 

இருப்பது.


18. ஏழை,பணக்காரர்,சாதி, உயர் 

அதிகாரி,பாமரன் என  பாகுபாடு 

அன்றி அனைவரையும் சாமியாக 

பார்ப்பதே சபரிமலையின் 

தனிச்சிறப்பு.


19. 41 நாட்கள் விரதம் இருக்கும் 

முறை  சபரிமலை யாத்திரையில் 

மட்டுமே காணப்பட கூடிய ஒன்று. 

வேறு எந்த கோவிலிலும் காண 

முடியாத கடுமையான விரத முறை. 


20. #அடர்ந்தகாட்டிற்குள்வன 

#விலங்குகள்தாக்கும்

#அபாயத்திற்கு 

மத்தியில் நடைபயனமாக 60 கிலோ 

மீட்டர் செல்வது சபரிமலை ஐயப்பன் 

கோவிலுக்கு மட்டுமே  


21. கேரள கட்டுமான முறையையும் 

தமிழ்நாட்டின் சாஸ்தா 

வழிபாட்டையும் இணைத்து #இரு 

#மாநிலத்தின்ஒற்றுமைசின்னமாக 

#இருப்பது_சபரிமலை 


22. மணிகண்டன் கல்வியை 

குருவிடம் தான் பயில வேண்டும் 

என்று ஆசைப்பட்ட ராஜசேகர 

பாண்டியனின் ஆசையே இன்று குரு 

தத்துவமாக குருசாமியாக ஐயப்ப 

யாத்திரையில் இருக்கிற வழக்கம்.. 

தன்னை காண வேணுமெனில் குரு 

மூலமாகத் தான் வர வேண்டும் என்று 

ஆசைப்பட்டவர் ஐயப்பன் 


23. மற்ற கோவில்களை போல் 

தினமும் அல்லாமல் ஆண்டில் 

வெறும் 120 நாட்களுக்கும் குறைவாக 

நடை திறந்து இருக்கும் கோவில் #சபரிமலையே


24. சபரிமலை யாத்திரையை தமிழக 

மக்களிடையே மிகவும் பிரபல 

படுத்தியவர்  #நவாப்_ராஜ 

#மாணிக்கம்_பிள்ளை ... பாடல்கள் 

மூலம் பிரபலபடுத்தியவர்கள் 

வீரமணி சோமு மற்றும் அவர் தம்பி 

கே வீரமணி. 


25. இன்று போல் அடர்ந்த காட்டில் 

சாலை,ஹோட்டல்கள் இல்லாத 

காலத்தில் தமிழக பக்தர்களுக்காக  

உணவும் பேருந்து வசதியையும் 

ஏற்படுத்தி குருவாக  இருந்தவர் 

நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட புனலூர் தாத்தா சுப்ரமணிய அய்யர். 


26. ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் 

இருக்கும் வாவர் மசூதிக்கு சென்று 

வாவரை வணங்குவது வழக்கம். 

அதன் பிறகே பெருவழியில் 

நுழைகின்றனர். எந்த இந்து 

கோவிலிலும் இல்லாத இந்த முறை 

சபரிமலையை தனித்துவமாக 

காட்டுகிறது. 


27. சபரிமலைக்கு மற்ற 

கோவில்களை போல் குறிப்பிட்ட 

வருடங்களுக்கு பிறகு 

கும்பாபிஷேகம் செய்கிற வழக்கம் 

இல்லை. ஆண்டுதோறும் வரும் 

பக்தர்களின் பக்தியாலும் அதன் சக்தி 

குறையாமல் ஒவ்வொரு வருடமும் 

அதன் சைதன்யம் கூடிக்கொண்டே  

செல்வதாக நம்பப்படுகிறது. 


28. பரசுராமர் உருவாக்கிய சிறிய 

ஆலயத்தை மாற்றி அமைத்து 

பதினெட்டுபடிகளோடு 

உருவாக்கியவர் பந்தள அரசர் 

ராஜசேகர பாண்டியன். 


29. சபரிமலையை தவிர மற்ற 

கோயில்களில் சாஸ்தாவை 

வீராசனத்தில் காணலாம். அதன்படி, 

சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், 

மறு கால் மடித்தபடியும் இருக்கும். 

மடித்த காலையும் இடுப்பையும் 

சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பட்டம் 

வீரப்பட்டம் எனப்படும்.


30. சபரிமலையில் மாளிகைபுறத்து 

அம்மன் சன்னதி என்பது ஐயப்பன் 

வதம் செய்த பெண் மகிஷியின் 

தூய்மை வடிவமே. வதம் செய்த பிறகு 

ஐயப்பன் தன்னை மணந்து கொள்ள 

விருப்பம் சொன்ன போது “என் 

அருகிலேயே நீ இருக்கலாம் என்றும் 

எப்போது என்னை ஒரு 

கன்னிசாமியாவது வராமல் 

இருக்கிறாரோ அன்று உன்னை 

மணந்து கொள்கிறேன்” என்று 

கூறியவன் பிர்மச்சர்யம் கொண்ட 

ஐயப்பன்.. அந்த மாளிகைபுரத்து 

அம்மன் இன்றும் காத்துக் கொண்டு 

இருக்கிறாள்.. ஆண்டு தோறும் 

பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது!!!


#சுவாமியேசரணம்ஐயப்பா !!!

Swamy saranam.. guruve saranam... today pooja at sannidhanam 21-12-2021

 




ஆருத்ரா தரிசனம்! உத்திரகோசமங்கை மங்களநாதர் திருக்கோயில் | Uthiragosamangai Temple | Arudra Darshan