ஸ்ரீவில்லிபுத்தூர் : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், வையாளி சேவை நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, மாண்டுக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக, ரெங்கமன்னார், ஆண்டாள் வையாளி சேவை நடப்பது வழக்கம். அதன்படி வையாளி சேவை நேற்று நடந்தது. இதில் ஆண்டாள், நீல பட்டுடுத்தி சேஷ வாகனத்திலும்,ரெங்க மன்னார், பச்சை பட்டுத்தி குதிரை வானத்திலும் மாடவீதி, கந்தாடை வீதி, ரதவீதிகள் வழியாக, வீதி உலா வர, ஆத்துக்கடை தெருவில் வையாளி சேவை நடந்தது.

No comments:

Post a Comment