ஐயப்பன்காவு

வாங்க கொஞ்சம் கதையும் பேசுவோம் ..உண்டென்று சொல்வோற்கு உண்டல்லவா ..!!!!
இந்த “சம்றவட்டம் “ என்னும் வார்த்தை சமபரவட்டம் என்பதிலிருந்து உருத்திரிந்து, இங்கு தவம் புரிந்த சம்பர மகரிஷி என்னும் முனியின் பெயர் குறிப்பிடுவதாக உள்ளது.. தன்னுடைய தவம் தீரும் நிலையில் ஒரு பிராமணனிடம் தான் இதுகாறும் தொழுதுவந்த தெய்வம் ஐயப்பன் என்று சொல்லித் தான் செய்து வந்த பூஜை முறையை தெரியப்படுத்தினார்.. மற்ற எல்லா ஆலயங்களிலும் காண்பதைவிட இங்கு பூஜை முறைகள் வித்தியாசமாய் இருக்கும் ...
இந்த ஆலயம் “பாரதபுழா” என்னும் கேரளாவின் மிகப்பெரிய நதி கடலோடு சேரும் இடத்தில் உள்ளது... திரூர் ரயில் நிலையத்தில் இருந்து பதினொரு கல் தொலைவிலும் .. பொன்னானி என்னும் சிறு துறைமுகத்திலிருந்து ஆற்றின் குறுக்கே பயணித்தால் நான்கு கல்லும் ..தரைவழியே பயணித்தால் முப்பது கல் தொலைவும் இருக்கும்... தற்சமயம் அங்கு ஒரு தடுப்பணையும் ஒரு பாலமும் வந்தபடியால் இத்தூரம் குறைந்து விட்டது ..
இக்கோயில் குடிகொண்டிருப்பது நதியின் உள்ளே ஒரு சிறு தீவுப்பகுதியில் .. கோயிலின் நிலமட்டம் அருகிலிருக்கும் நிலமட்டத்தைவிட குறைவாக இருக்கும் .. ஆதலினால் மழைக்காலத்தில் மிக அதிக மழை பெய்யும் வருடத்தில் கோயில் நீரில் மூழ்கும் .. நீரில் கர்ப்பக்கிருகம் மூழ்கும் வருடத்தில் மட்டும் தான் இந்த அய்யப்பனுக்கு “ஆறாட்டு” நடைபெறும் .. ஆயினும் நீரின் வேகத்தில் ஒன்றுமாகாது அக்கோயில் அப்படியே இருக்கும்.. இத்தீவில் ஆலயம் பல வருடமாக உள்ளது... இக்கோயில் தோன்றிய காலத்தைச் சரியாக கணிக்க முடியாத அளவுக்குப் பழமை வாய்ந்தது .. படகு வழியே கோயிலுக்குள் சென்று அப்போதும் பூஜை செய்யப்படும் ..
இங்குள்ள அய்யப்பனும் கணபதியும் மண்ணில் புதைந்து தலை மட்டும் வெளியில் தெரியும் விதமாக உள்ளது.. இதன் காரணம் இவை இரண்டுமே சுயம்புவாகத் தோன்றியதாம் .. மண் நிறைய நிறைய இவ்விகிரகங்களும் வளர்ந்துக் கொண்டே வருகிறதாம் .. இங்கு பூஜையின் போது மணி நாதம் கேட்பதற்கில்லை .. மேலும் இங்குள்ள ஐயப்பன் பிரம்மச்சாரியல்ல .. இவர் குடும்பஸ்தன்.. மற்ற எல்லா ஐதீகத்திலும் ஐயப்பனை பிரம்மசாரியாகக் கேட்டிருப்போம் ..
ஆர்யபட்டா எனப்படும் கணித வல்லுநர் இங்கு தான் தோன்றினார் எனச் சொல்லப்படுகிறது... எனில் இந்த சம்மரவட்டம் என்னும் இடம் சமண மதம் சார்ந்த அரசர்களால் ஆளப்பட்டபகுதியாக இருக்க வேண்டும் .. சமணர்களின் புராணங்களில் கூறப்படும் “ஸ்ரவணபெல்கோலா” என்ற இடத்திலிருந்து “பரத” என்ற அரசனால் ஆளப்பட்டதனால் தான் இந்த நதிக்கு பாரதப்புழா என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.. அதற்கு வலுசேர்க்கும் விதமாக இக்கோயிலில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களும் மண்ணாலும் செப்பினாலும் செய்யப்பட்டுள்ளது .. இன்னமும் நிறைய அதுபோன்றவை இப்பகுதியில் காணப்படுகிறது..
இக்கோயிலும் இதன் புராணமும் பழைய ஹிந்து ஐதீகத்தில் குறிப்பிடப்படவில்லை .. காரணம் இங்கிருந்து கிழக்கே திருநாவாயா என்னும் இடம் தாண்டி உள்ள எல்லா மேற்கு பாகங்களும் அரபிக்கடலின் பகுதியாக இருந்தது எனச் சொல்லப்படுகிறது.. இந்த நம்பிக்கையின் பொருட்டே பித்ருகர்மங்கள் ஆகியவற்றை திருநாவாயா என்ற இடத்திலேயே செய்து ஆறு கடலோடு கலந்ததாக எடுத்துக்கொள்ளப்பட்டது என்ற அந்த இடத்தின் ஐதீகங்கள் குறிப்பிடுகிறது 
LikeLike ·  · 

No comments:

Post a Comment