PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஆடிமாதம் 18ம்திகதி ஆடிப்பெருக்கு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது .. நீர் நிலைகள் வற்றாமல் இருக்க வருணபகவானையும் .. தேவதைகளையும் வணங்கும் நாள் இது .. கிராமப்புறங்களில் வகை வகையான சாதங்களை தயார் செய்து கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று அதன் கரையில் பூஜைகள் செய்து சொந்தபந்தங்களுடன் உண்பது வழக்கம் .. நகர்புறங்களில் உள்ளவர்கள் கடற்கரைக்குச் சென்று விருந்து உண்டு மகிழ்வர் .. காவிரிக்கரை ஓரங்களில் ஆடிப்பெருக்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது .. காவேரி நதியின் இருகரைகளிலும் பதினெட்டு முக்கியமான இடங்கள் உண்டென்றும் அங்கே பதினெட்டு யோகியர்களும் .. மகரிஷிகளும் .. சித்த புருஷர்களும் பூமியினடியில் பிருத்வியோகம் பூண்டு தவம் செய்கிறார்கள் என்றும் கூறுவர் .. அவர்கள் ஆடிப் பதினெட்டு அன்று யோகத்திலிருந்து மீண்டு காவேரி நதியில் நீராடி தங்கள் தவப்பயனை காவேரி நதியில் கலக்கும்படிச் செய்கிறார்களாம் .. சித்த புருஷர்களின் சக்தி பதினெட்டாம் நாளில் காவேரியில் கலந்திருப்பதால் காவேரியானவள் அதிக சக்தியையும் புனிதத்தையும் பெறுகிறாள் .. ஆகவே இந்நாளில் காவேரியில் நீராடி வழிபட்டால் புனிதம் பெறுவதுடன் நாம் செய்த பாவங்களும் நீங்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன .. இராமப்பிரானும் ஆடிப் பதினெட்டில் காவேரி நதியில் நீராடி புனிதம் பெற்றார் .. காவேரி அம்மன் பூப்பெய்தியதாக ஓர் ஐதீகம் உள்ளது .. அன்று காவேரிக்கரைக்கோ அல்லது தங்கள் பகுதியில் உள்ள ஆற்றங்கரைக்கோ சென்று காதோலை .. கருகமணி .. மலர் .. மஞ்சள் .. பழங்கள் .. வெல்லம் கலந்த அரிசி புட்டு படைத்து வழிபாட்டில் மாங்கல்ய சரடையோ அல்லது மஞ்சள் தடவிய சரட்டினையோ வைத்து பூஜித்து தங்கள் கழுத்தில் அணிந்து கொள்வார்கள் .. வாழ்வில் என்றும் வசந்தம் வீச அம்மன் அருள் அனைவருக்கும் கிட்டுவதாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..

No comments:

Post a Comment