கணேச சரணம்... சரணம் கணேசா!

பதினாறு பேறு தரும் பதினாறு திருநாமங்கள்!
பதினாறு பேறு தரும்  பதினாறு திருநாமங்கள்!
சகலவிதமான துன்பங்களையும் தடைகளையும் நீக்கி, வளமான வாழ்வை அளிக்கும் வல்லமை பெற்றவை பிள்ளையாரின் திருநாமங்கள்.
விநாயக சதுர்த்தி திருநாளில், கீழ்க்காணும் ஸ்ரீகணபதியின் 16 நாமாக்களைச் சொல்லும் ஸ்லோகத்தைக் கூறி அருகம்புல்லால் அர்ச்சித்து வழிபடுவதால், பதினாறு பேறுகளும் கிடைக்கும்; சகல நன்மைகளும் உண்டாகும்.
ஸுமுகச்சைகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக:
லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:
தூமகேதுர்கணாத்யக்ஷே£ பாலசந்த்ரோ கஜானன:
வக்ரதுண்டஸ்ஸ¨ர்பகர்ணோ ஹேரம்பஸ்ஸ்கந்த பூர்வஜ:
அஷ்டாவஷ்டௌ ச நாமானி ய: படேச் ச்ருணுயாதபி
வித்யாரம்பே விவாஹே ச ப்ரவேஸே நிர்கமே ததா
ஸம்க்ராமே ஸர்வகார்யேஷ§ விக்நஸ்தஸ்ய ந ஜாயதே
தொகுப்பு: முருகானந்தம் 

கும்பகோணம் சாக்கோட்டை கிராமம் அருகே உள்ளது மலையப்ப நல்லூர். இவ்வூரின் எல்லையில் உள்ளார் ஆலமர விநாயகர். இந்த ஆலமரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. ஆலமரம் வரிசையாகப் பிளவு பட்டிருப்பதால் இயற்கையாகவே குகை போன்ற சந்நிதி அமைப்பு அமைந்துள்ளது. இந்த மரக் குகை கோயில் கோபுரம் போலவே அமைந்து பிள்ளையாரை மழை வெயில் ஆகியவற்றிலிருந்து காக்கிறது.
சேரன்மாதேவியில் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் குறைந்து போனால் குளக்கரை பிள்ளையாருக்கு மிளகு அரைத்துத் தடவி அபிஷேகம் செய்வார்கள். இப்படி மிளகு தடவி அபிஷேகம் செய்தால் மழை பெய்து கால்வாயிலும் தாமிரபரணி ஆற்றிலும் நீர் பெருக்கெடுத்தோடும் என்பது ஐதீகம். இதனால் இப்பிள்ளையாருக்கு 'மிளகுப் பிள்ளையார்’ என்று பெயர்.
ந்திர மாநிலம் ஸ்ரீசைலம் சிவன் கோயிலில் உள்ள விநாயகர் வலது கையில் எழுத்தாணியையும், கையேட்டையும் வைத்துக் கொண்டு எழுதுவது போன்று காட்சி அளிக்கிறார். இங்கு வருவோரை அவர் கணக்கெடுக்கிறார் என்பதும், அவரைத் தரிசித்து விட்டுத்தான் மற்ற மூர்த்திகளைத் தரிசிக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திலுள்ளது 'திலதர்ப்பணபுரி’ இங்குள்ள 'சுவர்ணவல்லி அம்பிகா சமேத முக்தீஸ்வர சுவாமி’ ஆலயத்தில் தனி சந்நிதியில் யானை முகமோ, தும்பிக்கையோ இல்லாமல் மனித முகத்துடன் 'நரமுக விநாயகர்’ அருள் பாலிக்கிறார். இது யானை முகனாக பிறப்பெடுப்பதற்கு முன் அன்னை பார்வதியால் உருவாக்கப்பட்ட ரூபமாகும்.
திரிபுர அசுரரை அழிக்கப் புறப்பட்ட சிவபெருமான் விநாயகரை வணங்கத் தவறியதால், சிவபெருமானின் தேர் அச்சை முறியச் செய்தார் விநாயகர். முப்புரம் எரி செய்த அச்சிவனுறை ரதம் அச்சது பொடி செய்த அதிதீரா என அருணகிரிநாதர் இவ்விநாயகர் குறித்து போற்றிப் பாடியுள்ளார். ஒரு காலத்தில் கொன்றை வனமாகத் திகழ்ந்ததாகக் கருதப்படும் இக்கோயில் சென்னை - திண்டிவனம் சாலையில் 60 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
தொகுப்பு:  எஸ்.விஜயா சீனிவாசன், 
திருச்சி ஆர்.ராஜ லக்ஷ்மி, வில்லிவாக்கம், 
ஜி.ஜெயலட்சுமி, சிட்லபாக்கம், 
எஸ்.விஜயலக்ஷ்மி,ஆதம்பாக்கம்


நாளை-விநாயக சதுர்த்தி. 29-08-2014

தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – 2 கப்
பச்சை மிளகாய் – 3
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு (சுமார் 1 டீஸ்பூன்)
தேங்காய்த் துருவல் – 1 டேபிள்டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காயெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.

ammani kozhukkattai


செய்முறை:

பச்சை மிளகாய், உப்பு பெருங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கப் பச்சரிசி மாவை இரண்டு கப் தண்ணீரில் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
கரைசலுடன் 2 டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் விட்டு அடுப்பில் வாணலியில் அடிப்பிடிக்காமல் கைவிடாமல் கிளறவும். (நான்ஸ்டிக் வாணலியில் எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம்.)
மாவு இறுக ஆரம்பிக்கும்போது அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். சுமார் 10 நிமிடத்துக்குள் மாவு வெந்து இறுகி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
ஆறிய மாவை சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு குக்கர் பாத்திரம் அல்லது இட்லிதட்டில் எண்ணெய் தடவி, உருண்டைகளை வைத்து குக்கரில் இட்லிவேக வைப்பதுபோல் வெயிட் போடாமல் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் வேகவைத்து எடுக்கவும்.
அடுப்பை அணைத்த உடனே திறந்து மின்விசிறி அடியில் ஆறவிடவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் தாளித்து, மெதுவாக உருண்டைகளைச் சேர்த்து உடையாமல் நாசுக்காகக் கிளறிவிடவும்.
கொழுக்கட்டைகளைச் சேர்த்தபின் ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்திருந்து கிளறி இறக்கிவிடவும்.
* சூடாகவோ ஆறியோ எப்படிச் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

* கொழுக்கட்டை மாவு மிகுந்தாலும் இந்த மாதிரி செய்யலாம். தேவையான பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் அரைத்த விழுதை மாவிலேயே நன்கு கலந்துப் பிசைந்து உருண்டைகள் பிடித்து குக்கரில் வேகவைத்து மேலே சொன்னபடி தாளித்துக் கிளறவும்


No comments:

Post a Comment