அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று ‘ விநாயகசதுர்த்தி ‘ தங்களனைவருக்கும் விநாயகரின் அருட்கடாக்ஷ்ம் கிடைத்திட வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. விநாயகர் மிகவும் எளிமையான கடவுள் .. யார் அழைத்தாலும் ஓடோடி வந்து அருள்தருவார் .. அதனால் தான் எல்லோருக்கும் பொதுவாகவும் யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார் .. விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார் .. தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயினி .. ஆனால் தட்சனோ மிகவும் மிகவும் கர்வம் பிடித்தவன் மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று மகளையும் கேலி பேசினான் .. இந்த அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியாத தாட்சாயினி தட்சன் வளர்த்து வைத்திருந்த யாககுண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள் .. அதன்பிறகு பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள் .. சிறுவயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள் .. அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளது தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார் .. அதன்படியே மண்ணால் ஒரு விநாயகர் விக்கிரகத்தை உருவாக்கினாள் .. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள் .. அந்த விக்கிரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள் .. ஆவணிமாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள் .. அதற்குப் பிறகு மண்பிள்ளையாரை மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துச்சென்று நதியிலே இறக்கிவிட்டாள் .. அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமலும் இருந்த விரதத்தின் பலனாக தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள் .. // .. விநாயகர் ஆதிபரம்பொருள் எல்லோருக்கும் மூத்தவர் பிரம்மா .. விஷ்ணு .. சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான் .. அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார் .. அந்தமாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன்மகனாக அவர் தோன்றியது .. அற்பத்தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக்கொள்கிறார் .. காட்டுப்பூவான எருக்கம்பூவைக்கூட அவர் மறுப்பதில்லை .. அவரைப் பொறுத்தவரை புல்மாலை போட்டவரும் ஒன்றுதான் .. ரோஜாமாலை போட்டவரும் ஒன்றுதான் .. வித்தியாசமே பார்க்கமாட்டார் .. தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா .. அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் என்பதை மட்டும் தான் பார்ப்பார் .. இந்த விரதங்களால் உள்ளம் மேன்மை அடையும் .. உடலாரோக்கியம் வளரும் .. எல்லா வளங்களும் நிறையும் .. விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல அவர்களைச் சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார் .. .. .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY GANESH CHATURTHI .. MAY LORD GANESH BLESS YOU WITH PROSPERITY .. BEST HEALTH AND HAPPINESS FOREVER ..

No comments:

Post a Comment