அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதம் .. சிவபெருமானைத் துதித்து தங்களனைவருக்கும் அனைத்து செல்வங்களும் கிடைத்திட பிரார்த்திக்கின்றேன் .. .. .. .. ........ ... .. ஓம் நமசிவாய .. சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம் .. ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும் .. மாதந்தோறும் இருமுறை வளர்பிறை .. தேய்பிறை .. திரையோதசி (13ம்நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும் ..இந்நாட்களில் மாலை 4.30 மணிமுதல் .. 6.00 மணிவரையிலான நேரமே பிரதோஷ காலமாகும் .. இந்தநேரத்தில் பரமசிவனை வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை .. பிரதோஷம் என்றால் என்ன..? .. சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான் .. தேவர்களும் .. அசுரர்களும் .. போட்டி போட்டுக்கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது .. திருமகள் .. ஐராவதம் .. காமதேனு .. கற்பகத்தரு .. சிந்தாமணி .. கௌஸ்துபமணி .முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின .. லட்சுமியைத் திருமால் ஏற்றுக்கொண்டார் .. மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக்கொண்டனர் .. ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது .. இதைக்கண்டு தேவர்களும் .. முனிவர்களும் பெரிதும் நடுங்கினர் .. உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த விஷத்தை உண்டார் .. தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக் கண்ட பார்வதி தேவி .. தன் கரங்களால் அவரைத்தொட விஷம் சிவனின் நெஞ்சுக்குழியிலேயே நின்று விட்டதால் இறைவன் நீலகண்டனானார் .. இந்த நேரம்தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது .. நந்திதேவரையும் மறவாமல் வழிபாடு செய்ய வேண்டும் .. நந்திதேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும் .. // .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. MAY LORD SHIVA BLESS YOU .. AND GUIDES YOU .. HAVE A BLESSED SUNDAY TOO ..
No comments:
Post a Comment