PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று பிரதோஷ விரதம் .. இதனை “ மிருத்யுஞ்சய பிரதோஷம் “ என்பர் .. இது மரண பயத்தைப் போக்கவல்லது .. மந்திரம் - ஓம் த்ரியம்பகம் யஜாமஹே! சுகந்திம் புஷ்டி வர்தனம்! உருவாருகமிவ பந்தனான்! ம்ரித்யோர் மோக்ஷியே மா அம்ருதாத் ! பொருள் - மூன்று கண்களை உடைய சுகந்தமான நறுமணத்தை உடைய .. நம் எல்லோருக்கும் உணவு அளிப்பவரும் ..நம்மை வளர்ச்சி அடைய செய்பவருமான சிவபெருமானைப் போற்றி வணங்குகிறோம் .. விளாம்பழம் எப்படி தன் காம்பிலிருந்து பிரிந்து விழுகிறதோ .. அதேபோல நம்மை பந்தங்களில் இருந்து விடுவித்து மரணம் என்னும் பயத்திலிருந்து விடுவித்து .. அழியாத நிலை அதாவது மோக்ஷ்நிலை அடையச் செய்வாயாக ! என்றும் அழியாதவனே ஈஸ்வரா !! .. பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள் .. நோய் தீரவும் .. ஏழ்மை ஒழியவும் .. துயரங்கள் விலகவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும் .. இவ்விரதத்தை கடைபிடிக்க விரும்புபவர்கள் சித்திரை .. வைகாசி .. ஐப்பசி .. கார்த்திகை ஆகிய மாதங்களில் வரும் சனிப்பிரதோஷ நாளில் விரதத்தை தொடங்குதல் சிறப்பு விரதம் கடைபிடிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோஷவேளையாகிய சூரிய அஸ்தமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்தபின்பு உணவருந்த வேண்டும் .. ஆலகால விஷத்தால் மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் காத்தவேளையே பிரதோஷ காலம் .. மாலை 4.30 - 6.30 மணிவரை காலமே பிரதோஷவேளை .. இவ்வேளையில் சிவபெருமான் நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கிடையே நின்று நடனம் புரிந்து தேவர்களுக்குத் தரிசனம் தந்தருளுவதாக நம்பிக்கை .. சிவாலயம் சென்று சிவனைத்தரிசித்து சகல சம்பத்துக்களையும் பெறுவீர்களாக .. ”ஓம் சிவாய நமஹ” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. " OM SHIVAAYA NAMAHA "

No comments:

Post a Comment