அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. துவாதசித் திதியாகிய இன்று அன்னதானம் செய்வது சாலச்சிறந்தது .. அண்ணாமலையானுக்கே செய்த பலன் கிட்டும் .. அண்ணாமலையில் ஒருவேளை அன்னதானம் செய்தால் பிறந்ததுமுதல் இறக்கும்வரையிலும் ஒருகோடிபேருக்கு செய்த புண்ணியம் கிட்டும் .. மேலும் மறுபிறவியில்லாத முக்தி கிட்டும் .. ” ஆதிசங்கரர் கனகாதர ஸ்தோத்திரம்” - ஒரு துவாதசி நாளைக்கு ஒருவீட்டின் முன் போய் நின்று ஆதிசங்கரர் “பவதி பிக்ஷ்ந்தேஹி” என்று சொல்லவேண்டும் .. ஏதாவது பிக்க்ஷை போட்டால் மட்டுமே அதை உண்ணவேண்டும் .. வேறெதையும் கேட்கக்கூடாது .. ஒருவேளைமட்டும்தான் .. அந்த ஒருவேளையிலும் கூட மும்முறைமட்டுமே குரல் கொடுக்கவேண்டும் .. பிக்க்ஷை போடவில்லை என்றால் அன்று பசியுடன் இருக்க வேண்டியது தான் .. அவ்வாறு ஒரு வீட்டின் முன்னால் சென்று குரல் கொடுத்தார் அந்த வீட்டுக்காரர்கள் பரமஏழைகள் .. அன்று ஏகாதசி விரதம் முடிந்து துவாதசி விரதத்தை நெல்லிக்கனியை உண்டு பூர்த்திசெய்யவேண்டும் அதற்கான நெல்லிக்கனி மட்டுமே அந்த வீட்டில் அன்று இருந்தது .. நெல்லிக்கனியை உண்ணவில்லையானால் விரதபங்கம் ஏற்படும் .. ஆதிசங்கரர் குரல்கொடுத்தபோது அந்த வீட்டு அம்மாள் எதை பிக்க்ஷையாகப் போடுவது என்று தெரியாமல் திகைத்தாள் .. இரண்டுமுறை குரல் கொடுத்தாகிவிட்டது .. மூன்றாவது குரலுடன் போய்விடுவார் .. அப்படியாகினால் ஓர் இளம் சந்நியாசியைப் பசியுடன் திருப்பியனுப்பிய பாவம் நேரிடும் .. ஆகவே அந்த நெல்லிக்கனியை ஆதிசங்கருக்குப் போட்டுவிட்டாள் .. இதனைக்கண்ட ஆதிசங்கரர் அந்தப்பெண்மணியின் நிலைமைகுறித்து மனம் கசிந்துருகி ஸ்ரீலக்ஷ்மியிடம் வேண்டி “கனகதாரா “ என்னும் துதியைச் சொன்னார் .. உடனே தேவி சங்கரர் முன் எழுந்தருளி வறுமையில் வாடிய குசேலரும் சுசிலையும் பகவான் கிருஷ்ணரின் திருவருளால் குபேர சம்பத்தைப் பெற்றனர் .. வறுமையில் வாடியவர்கள் பெற்ற செல்வத்தால் நியமங்களை .. ஆசார அனுஷ்டானங்களை மறந்து சுக பசி அமர்த்தாமல் தவிக்கவிட்டனர் .. எனவே அப்பாவவினையின் பயனாக இந்த யுகத்தில் அவர்கள் இங்கே வறுமைப் பிடியில் சிக்கித்தவிக்கின்றனர் .. என்ற உண்மையை ஸ்ரீசங்கரரிடம் ஸ்ரீமஹாலக்ஷ்மிதேவி புலப்படுத்தினாள் .. இருப்பினும் வறுமையிலும் திடமனத்துடன் ஆதிசங்கருக்கு நெல்லிக்கனியை பிக்க்ஷையாக இட்ட காரணத்தினால் ஸ்ரீலக்ஷ்மிதேவி மனமுருகி அந்த இல்லத்தின் மீது தங்கமயமான நெல்லிக்காய்களை மழைபோல் பொழிந்தார் .. அதுமட்டுமல்லாமல் இந்தக் கனகதார ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் தன் நன்னருள் கிடைக்கும் என உறுதிமொழிகிறார் .. முற்றும் துறந்த மகான் ஆதிசங்கரர் தன் பக்தர்களுக்காக ஸ்ரீலக்ஷ்மியிடம் கையேந்தி நிற்கிறார் .. ஸ்வர்ணமாரி பொழியும் திருமகளைப்போற்றி அன்னையின் திருவருள் அனைவரும் பெற்றிடுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAXMI .. MAY SHE SHOWER YOU WITH HAPPINESS AND PROSPERITY .. ' JAI MATA DI ' ..

No comments:

Post a Comment