அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மார்கழிமாதம் தக்ஷிணாயனத்தின் இறுதிமாதமாகும் .. மார்கழிமாதத்தில் தில்லைச்சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப்பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு .. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும் .. இக்காலத்தில் (வைகறையில்) சுவாமிதரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகிறது .. அக்காலத்தைப் ’ பிரம்ம முகூர்த்தம் ‘ என்றும் அழைப்பர் .. மார்கழிமாத திருவாதிரை நட்சத்திரம் சிவவழிபாட்டுக்குரிய நாட்களில் மிகச்சிறந்ததாகக் கூறப்படுகிறது .. பத்து நாள் நோன்பான திருவெம்பாவை மார்கழித் திருவாதிரையுடனேயே முடிவுறுவது வழமையாகும் .. இந்நாளில் ஆடல்வல்லானுக்கு திருமுழுக்காட்டுதல் இடம்பெறும் .. இதை தரிசிப்பது மிகுந்த புண்ணியம் தரக்கூடிய ஒன்றாகக் கருதப்படுகிறது.. இவ்வாறு ஆனந்த நடனமாடும் ஆண்டவனைத் தரிசித்து சகலசௌபாக்கியங்களையும் பெறுவீர்களாக .. 
அஸ்வினி .. பரணி ..எனத்தொடங்கி .. ரேவதிவரை பதினேழு நட்சத்திரங்கள் இருந்தாலும் .. ‘திரு’ என்ற அடைமொழியுடன் குறிக்கப்படுவது ஆதிரை .. ஓணம் ஆகிய இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே .. இதில் திருவோணம் பெருமாளுக்கு உரியதாகும் .. திருவாதிரை என்பது சிவனின் நட்சத்திரமாகும்..
சிவனுக்கு போகநிலை .. வேகநிலை .. யோகநிலை என்ற மூன்றுவித கோலங்களை சித்தர்களும் முனிவர்களும் யோகீஸ்வரர்களும் குறிப்பிட்டுள்ளார்கள் .. 
மனைவி .. மக்கள் .. வீடு வாசல் .. என்று குடும்பஸ்தராக .. கல்யாணசுந்தரராக .. உமாமஹேஷ்வரராக .. சோமசுந்தரராக அருள்செய்வது “ போகநிலை”..
அடுத்து தீமைகளைபோக்கும் விதத்தில் சம்ஹாரமூர்த்தியாக அவர் “வேகவடிவம்” எடுக்கிறார் .. கஜசம்ஹாரர் .. காமதகனமூர்த்தி .. ருத்ரமூர்த்தி .. என்ற வடிவங்களில் தீமைகளை போக்குகிறார் .. 
மிக உயர்ந்தநிலை எனப்படும் “யோகநிலை” ஞானமூர்த்தியாக வரும்போது .. மௌனமே பிரதானம் .. இதுவே தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியாகும் .. போகம் .. வேகம் .. யோகம் என்ற மூன்று கோலங்களையும் ஒருசேர அருள்வதே “நடராஜர் வடிவம்” .. 
“ நமசிவாய “ என சொல்வோமே ! நன்மைகள் ஆயிரம் கொள்வோமே !! .. ஓம் நமசிவாய .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED MONDAY .. MAY THE DIVINE BLESSINGS OF LORD SHIVA BRINGS YOU ETERNAL BLISS AND FULFILL ALL YOUR DESIRES .. .. "OM NAMASHIVAAYA" ..

 

No comments:

Post a Comment