PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய முருகப்பெருமானைத் துதித்து தங்களனைவருக்கும் இன்னல்கள் யாவும் மறைந்து ..செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றியும் மகிழ்ச்சியும் கிட்டிட வாழ்த்தி வணங்குகின்றேன் .. ‘ எந்தவினையானாலும் கந்தனருள் இருந்தால் வந்தவழி ஓடும்’ என்பது சான்றோர் வாக்கு ..
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் !! தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் .. பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பதுதான் .. இந்தக்காவடி எடுப்பதன் காரணம் .. அகஸ்திய முனிவரின் சீடர்களின் ஒருவரான இடும்பனை அழைத்து தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்தமலையிலுள்ள சிவசக்தி சொரூபமான .. சிவகிரி .. சக்திகிரி .. எனும் இரு சிகரங்களையும் கொண்டுவரும்படி கூறினார் .. அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க காவடியாகக் கட்டி எடுத்துக்கொண்டு வந்தான் .. முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினைகுடியில் நிலைபெறச் செய்யவும் .. இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார் ..
இடும்பன் வழிதெரியாமல் திகைத்த போது முருகன் குதிரைமேல் செல்லும் அரசனைப்போல் தோன்றி இடும்பனை ஆவினன்குடிக்கு அழைத்துவந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார் .. இடும்பனும் காவடியை இறைக்கிவைத்து ஓய்வெடுத்துவிட்டுப் புறப்படும்போது காவடியைத் தூக்கமுடியாமல் திண்டாடினான் .. ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமற் போனது என்று சுற்றிப்பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான் .. இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.. ஆனால் அந்த சிறுவன் இந்தமலை தனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாட .. கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான் .. அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான் .. இதைக்கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார் ..
அப்போது முருகன் .. இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம் .. பால் .. மலர் .. போன்ற அபிஷேகப்பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கும் அருள்பாலிப்பதாக வாக்களித்தார் .. அப்போது முதல் முருகனுக்கு இந்த காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகிவிட்டது .. என்று ஆன்மீகவாதிகள் சொல்கிறார்கள்
எது எப்படியோ ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் .. துன்பமும் இரண்டு சுமைகளாக சரிசமமாக இருக்கின்றது .. மனிதனாகப்பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும் ..இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக்கோலாக உள்ளது .என்பது மட்டும் உண்மை .. முருகனின் அருட்கடாக்ஷ்ம் அனைவரும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வீர்களாக ... ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வர புத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. " OM MURUGA " ..

No comments:

Post a Comment