அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று மஹாவிஷ்ணுவதைத் துதித்து தங்களனைவருக்கும் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஓம் நாராயணாய வித்மஹே! வாசுதேவாய தீமஹி! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்! .. “சுதர்சன சக்கர மகிமை” .. உலக உயிர்களையெல்லாம் காத்தருளுகின்றவர் விஷ்ணுபகவான் ..ஏனெனில் காத்தல் தொழிலைச் செய்வது அவரே! விஷ்ணுவானவர் இந்த தொழிலை புரியும் நிலையில் ஒரு கையில் சுதர்சனம் என்னும் சக்கரத்தையும் .. மற்றொரு கையில் பான்யசன்னியம் என்னும் சங்கையும் .. இன்னொரு கையில் கௌமேதகம் என்னும் கதையையும் .. தாங்கிய வடிவில் விளங்குகின்றார் .. இவ்வாயுதங்கள் அனைத்திலும் மேன்மைமிக்கது சுதர்சன சக்கரமாகும் .. விஷ்ணுபகவானிற்கு எத்தைகைய சக்தி இருக்கின்றதோ அத்தகைய சக்தி இச்சக்கரத்துக்கும் உள்ளது .. ஆயுதங்களின் அரசன் என போற்றப்படுவதும் இதனால் இதனை ‘சக்கரத்தாழ்வார்’ என்றும் அழைப்பர் .. இந்தச் சிறப்புமிக்க சக்கரத்தின் பெருமைகளைக் காண்போம் .. இன்னல் நீக்கி இன்பம் அளிக்கவல்லது சுதர்சன சக்கரமாகும் .. கஜேந்திரனின் அவலக்குரல் கேட்டு அவ்விடம் வந்த விஷ்ணுபகவானின் கையிலிருந்து விரைந்து சென்ற சுதர்சனப் பெருமான் கஜேந்திரனை பிடித்திருந்த முதலையை பிளந்து அவனைக் காத்தருளி மீண்டும் பகவானின் கரத்தில் வந்து சேர்ந்தது .. அதுமட்டுமா .. விஷ்ணுபகவான் கிருஷ்ணராக அவதாரம் செய்தபோது கிருஷ்ணபகவானை .. அவரது மகிமையை அறியாத சிசுபாலன் பழித்துரைக்கின்றான் .. கிருஷ்ணரும் சிசுபாலனின் தாய்க்கு நூறு தடவைகள் சிசுபாலனின் பழிச்சொற்களை பொறுப்பேன் .. என வாக்களித்தார் .. அதனைப் பொருட்படுத்தாத சிசுபாலன் நூறுதடவைகள் கடந்து நூற்றி ஓராவது பழிச்சொல்லை கூறும்போது பகவானின் கையில் இருந்த சக்கரம் கண் இமைக்கும் பொழுதில் சென்று சிசுபாலனின் சிரசைக் கொய்து திரும்பியது .. அர்ஜுனன் மகன் அபிமன்யுவின் மரணத்திற்கு காரணமாகவிருந்த ஜயத்ரதனை கொல்வதாக சபதம் முடித்த அர்ஜுனனுக்காக மாதவன் கையிலிருந்த சக்கரத்தினால் சூரியனை மறைத்து பின் அதனை விலக்கவும் அதனால் ஜயத்ரதனை அர்ஜுனன் கொன்றான் .. இவ்வாறான மகிமைகளைக் கொண்ட சக்கரத்தாழ்வாரை நாம் பக்தியுடன் வழிபட்டு வந்தால் பின்வரும் நன்மைகள் உண்டாகும் .. மனதில் உள்ள பயம் விலகும் .. தீராத நோய்கள் நீங்கும் .. எதிரிகள் யாரும் இருக்கமாட்டார்கள் .. அவ்வாறு இருந்தால் அவர்கள் அழிந்து போவார்கள் .. செல்வவளம் பெருகும் .. புத்தியில் தெளிவு உண்டாகும் .. முட்டாள்தனம் நீங்கும் .. இவற்றைத் தவிர சுதர்சன மகாமந்திரத்தை தினமும் கூறி சுதர்சனப் பெருமாளை வழிபட்டு வரவேண்டும் எனவே ஒளிவீசக்கூடிய வலிமை பொருந்திய வாசனைமிகுந்த துளசிமாலையை சூடிய பரந்தாமனின் திருக்கரத்தில் இருக்கின்ற சுதர்சனமாகிய ‘சக்கரத்தாழ்வாரை வழிபட்டு சகல நன்மைகளும் பெறுவோமாக .. “சுதர்சன காயத்ரி மந்திரம் “ .. ஓம் ! சுதர்சனாய வித்மஹே! ஜ்வாலா சகராய தீமஹினா !!! .. வாழ்க வளமுடனும் நலமுடனும் .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. 'OM NAMO NAARAAYANAA' ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment