PANVEL BALAGAR
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று அனைவராலும் போற்றி வணங்கப்படும் குருநாதர் ஷீரடி சாய்பாபாவினது தினம் ஆகும் அவரைத் துதித்து தங்களனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் பெற்று .. உடல்நலமும் .. மனநலமும் ஆரோக்கியத்துடன் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் ஷீரடி வாஸாய வித்மஹே ! ஸச்சிதானந்தாய தீமஹி ! தந்நோ ஸாயி ப்ரசோதயாத் !! .. கடவுள் ஒவ்வொரு யுகத்திலும் மனிதவடிவம் எடுத்து மக்களுக்கு பல நன்மைகளை செய்கிறார் .. அதுபோல இந்த கலியுகத்தில் இந்திய மண்ணில் மனிதவடிவெடுத்த கடவுள் ஷிர்டி சாய்பாபா .. ஷிர்டி மண்ணை எந்த ஒரு மனிதனும் ஒருமுறை மிதித்துவிட்டால் பெரும் புனிதத்தன்மை ஏற்படும் பாபா இருந்து .. வாழ்ந்து .. மறைந்து இன்னும் நம்மைவிட்டு நீங்காமல் அருள் செய்துகொண்டு இருக்கும் புனிதத்தலமே ஷிர்டி .. இந்த கலியுகம் இருமகான்களால் மட்டுமே புனிதப்படப் போகிறது .. ஒருவர் ஷீரடி சாய்பாபா .. மற்றொருவர் பூஜ்ஜிய ஸ்ரீகுரு ராகவேந்தர் .. மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயரின் (சிவன் .. பிரம்மா .. விஷ்ணு) அவதாரமாகத் தோன்றி மக்களை பக்திமார்க்கத்தில் நன்மையடையச் செய்தவரே ஷீரடி சாய் .. ஸ்ரீ கோவிந்தராவ் ரகுநாத் தபோல்கர் அவர்கள் ஸ்ரீஷீரடி சாய்பாபாவின் அருள்பெற்று எழுதிய ஸ்ரீ சாய்சத்சரிதம் பாபா பற்றிய எல்லாத் தகவல்களையும் நமக்கு தெரிவிக்கின்றது .. ஒவ்வொரு சாய் அடியவர்களின் வீட்டிலும் இருக்க வேண்டிய புனித நூல் “ சாய்சரிதம் “ .. 1 - துவாரகாமாயி - நீங்கள் அமர்ந்துகொண்டிருக்கும் இதுவே நமது துவாரகாமாயி தனது மடியில் அமரும் குழந்தைகளின் எல்லா ஆபத்துக்களையும் .. கவலைகளையும் அவர் தடுத்து விலக்குகிறார் .. இந்த மசூதிமாயி மிகவும் கருணையுள்ளவர் அவர் எளிய பக்தர்களின் தாயாவார் .. அவர்களைப் பேராபத்துக்களிலிருந்து அவள் பாதுகாக்கிறாள் .. ஒரு மனிதன் அவர் மடியில் ஒரே ஒரு முறை அமர்ந்தால் அவனது எல்லா கஷ்டங்களும் முடிவடைந்துவிடும் .. அவரது நிழலில் இளைப்பாறுவோர் பேரானந்தம் எய்துகின்றனர் .. 2- வாதாடுதல் நன்றன்று - போராடி வாதாடுதல் நன்றன்று .. எனவே விவாதிக்கவேண்டாம் .. மற்றவர்களுடன் போட்டிபோட வேண்டாம் .. எப்போதும் உங்களது அக்கறையினையும் .. நலத்தினையுமே கருத்தில் கொள்வீர்களாக.. கடவுள் உங்களை காப்பாற்றுவாராக .. 3 - உணவு - பசியாய் இருப்போருக்கு உணவு அளிப்பவன் உண்மையிலேயே எனக்கு உணவை பரிமாறுகிறான் என்று நிச்சயமாக அறிந்து கொள்வாயாக .. இதை ஒரு ஆதாரரீதியாகக் கருது .. 4 - நாமம் - நாமம் என்றால் சொரூபத்தை ஒருமித்த உச்சரிப்பின் மூலம் உண்மையை கிரஹித்தலே .. என் நாமத்தை உச்சரிப்பதால் வேறு சிந்தனைகள் தோன்றாது .. அனர்த்தமான துன்பங்கள் வராது .. புளியினால் பித்தளைப்பாத்திரத்தின் களிம்பு நீங்குவது போல் என் நாமஸ்மரணையினால் மாயை நசிகிறது என் சுத்த தத்துவம் என் நாமஸ்மரணையினால் தெரியவரும் .. 5 - சாயி என்ற பரம்பொருள் - பஞ்சபூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது .. நிலையற்றது ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள் .. அதுவே அழியாததும் நிலையானதுமான பரிபூர்ண உண்மையாகும் .. இப்புனித மெய்யை உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனதிற்கும் புலன்களுக்கும் அதிபதியாகவும் ஆட்டுவிப்போராகவும் உள்ள சாயி என்ற பரம்பொருளே !! (பாபாவின் அருள்மொழி) அற்புதமகான் ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் “ பாபா” என்ற இரண்டெழுத்து பேராற்றல் பெற்ற தாயைப்போல பரிவுகாட்டும் கருணைக்கடல் .. உலகம் போற்றும் பாபாவைப் போற்றி நாமும் துதித்து அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெறுவோமாக .. “ ஓம் சாய் ராம் “ .. .. WISH YOU ALL A BLESSED THURSDAY AND MAY SHIRDI SAI BLESS YOU AND GUIDES YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. " OM SAI RAM " ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment