PANVEL BALAGAR
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று கார்த்திகை விரதம் .. தங்களனைவருக்கும் வாழ்வில் நிம்மதி .. சந்தோஷம் .. உற்சாகம் .. வாழ்வில் என்றும் நிலைத்திட கலியுகவரதனாகிய கார்த்திகேயனைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! .. சிவபெருமான் தன் ஆறுமுகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட அதைத் தாங்கிய வாயுபகவான் சரவணப்பொய்கை ஆற்றில்விட்டார் .. அந்த நெருப்புகள் ஆறுகுழந்தைகளாகமாறி கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர் .. அன்னையான பார்வதி ஆறுகுழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது ஆறுமுகனாகத் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன .. முருகு என்ற சொல்லுக்கு அழியாத அழகும் .. குன்றாத இளமையும் .. இயற்கை மணமும் .. எல்லாப்பொருள்களிலும் கடவுள் தன்மை உண்டு என பல பொருள்கள் உண்டு .. மு - என்பது திருமாலையும் .. ரு - என்பது சிவபெருமானின் அம்சத்தையும் .. க - என்பது பிரம்மனையும் குறிக்கும் என்பர் .. முருகன் என்றால் அழகனே ! முருகனை உளமாறத் துதித்து குறையாத பெருஞ்செல்வத்தைப் பெறுவீர்களாக .. சரணம் சரணம் சரவணபவ ஓம் .. சரணம் சரணம் சண்முகா சரணம் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . MAY LORD MURUGA BLESS YOU AND GUIDES YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. " OM MURUGA " ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment