அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியை வழிபடும் நாளாகும் .. அன்னையைத் துதித்து தங்களனைவருக்கும் சகலசௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன் .. அன்னையை வணங்குகின்றேன் .. யாதேவி ஸர்வ பூதேஷு ! லக்க்ஷ்மி ரூபேன ஸம்ஸ்த்திதா ! நமஸ்தஸ்யை ! நமஸ்தஸ்யை ! நமஸ்தஸ்யை ! நமோ நமஹ!! .. அன்னை தருமத்தின் திருவுருவம் .. கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனைப் பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும் .. தூய்மையும் ஒளியும் பொருந்திய இடங்களில் வீற்றிருப்பவள் மஹாலக்ஷ்மி .. மனிதர்களும் அகத்தூய்மை .. புறத்தூய்மையுடன் இருக்க மனிதர்களின் அகத்தினுள்ளும் இறைவனுடன் அம்பாளும் வீற்றிருப்பாள் .. அவர்களின் வாழ்வில் குறையேது ! பரந்தாமனும் அம்பாளும் வீற்றிருக்கும் இடமல்லவா .. அன்னையின் முகம் கருணை சொரூபம் .. அன்பான கண்கள் .. நம்மை அரவணைக்கும் கைகள் .. நம் நிலையை அறிந்து அருளும் ஸ்ரீசொரூபம் .. அன்னையைப் போற்றுவோம் .. அன்னையின் திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் பெறுவோமாக .. ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. MAY THE DIVINE BLESSINGS OF GODDESS LAKSHMI BRINGS YOU ETERNAL BLISS AND FULFIL ALL YOUR WISHES .. OM SHAKTHI .. " JAI MATA DI "
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment