PANVEL BALAGAR
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று தேய்பிறை அஷ்டமித் திதியாகும் .. “ பைரவரை “ வழிபடுவதற்கு உகந்த தினமும் ஆகும் .. அவரைத் துதித்து தங்களனைவருக்கும் தொழில் விருத்தி .. உத்தியோகத்தில் பதவி உயர்வு .. கடன் சுமை குறையவும் .. இல்லத்தில் மகிழ்ச்சியும் .. சுபீட்சமும் நிலவவும் பைரவரைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே ! சூலஹஸ்தாய தீமஹி ! தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !!! .. பைரவர் சிவனது அம்சம் ஆவார் .. பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர் .. அடியார்களின் பாபத்தையும் நீக்குபவர் என்று பொருள் .. இந்தக் கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார் .. பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார் .. அவருக்குத் தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை இடுக்கண்களிருந்து காப்பாற்றுவார் என்றில்லை .. எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழுமனதுடன் அவரை நினைத்தாலே போதும் சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுவார் .. கோவில்களில் முதலில் துவங்கும் காலை பூஜையும் இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீபைரவருக்கே உரியது .. பற்றற்ற நிலையில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்கிரகத்தைத் தொட்டு வணங்குதல் .. நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது .. கோவிலில் இருக்கும் குருக்கள் மூலமாகத்தான் புஷ்பம் முதலியவை சாற்றுதல் வேண்டும் .. திரை இட்டு சிலையை மூடி இருந்தாலும் .. கதவு சாத்தியிருந்தாலோ விளக்கு போடக்கூடாது .. நம்முடைய கர்மவினை நம்மை பைரவரை வழிபட (நிறைவான வாழ்க்கை வாழ) அனுமதிக்காது .. நிறைய தடைகளை ஏற்படுத்தும் .. சோம்பேறித்தனத்தை உண்டு பண்ணும் .. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நம் வாழ்வில் தொடர்ந்து வழிபாடு செய்து வரவேண்டும் .. அவரே நம்வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் தீர்மானிக்க ஆரம்பிப்பார் .. குருவாக இருந்து வழிநடத்த ஆரம்பிப்பார் .. எப்போதும் கூடவே இருப்பார் .. பைரவரின் திருவருள் கிடைத்து அஷ்டமா சித்திகளையும் பெறுவீர்களாக .. “ஓம் ஸ்ரீகாலபைரவாய நமஹ” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD BHAIRAVA ' OM SHREE KAALA BAIRAVAAYA NAMAHA ' .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment