அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் துதித்து தங்கள் அனைவருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் .. சுபீட்சமும் .. நல்லாரோகியமும் பெற்றிட பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணுப்ரசோதயாத் !!! நம் உடலுக்குள் உயிர் இருக்கின்றது .. அதுபோல் உயிருக்கு உயிராக இருப்பவர் பகவான் விஷ்ணுதான் .. அந்தராத்மாவாக வேறுவிதத்தில் சொல்வதென்றால் .. நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா ! ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா ! நமக்குள் பகவான் இருப்பதை உணர்ந்து கொண்டால் நம்வாழ்க்கை ஆனந்தமயமாக ஆகிவிடும் .. பவானைத் துதிப்போம் வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றிகாண்போம் .. அனைவருக்கும் வெற்றி நிச்சயம் ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும். WISH YOU ALL EVERY SUCCESS IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. ' OM NAMO NAARAAYANAA ' ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment