அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையில் சஷ்டிவிரதம் வருவதும் சிறப்பே .. செவ்வாய்க்கு அதிபதி முருகனே .. முருகனாலயம் சென்று கலியுகவரதனாகிய கார்த்திகேயனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறையருளானது மந்திர .. யந்திர சக்திகளினாலே சேர்த்து ஒன்றாகத்திரட்டி ஆலயங்களிலே வைக்கப்பட்டுள்ள தென்றும் .. ஆலயங்களுக்குச் சென்று வணங்கும் பொழுது நாம் செய்த ஊழ்வினைகள் யாவும் வெதும்பி அவற்றின் வேகம் குறைந்துபோய்விடுமென்றும் வாரியார் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார் .. உலகெல்லாம் நிறைந்து விளங்குகின்ற பரம்பொருளான முருகப்பெருமான் தம்மை நினைத்து உள்ளமுருகி வணங்கி வாழும் அடியார்களுக்கு அருள்பாலிப்பார் ..இன்னகாரியம் நமக்கு நிறைவேற்றித் தரவேண்டும் என்று பக்திப்பூர்வமாக நேர்த்தி வைத்து உள்ளன்போடு வணங்கினால் அந்தக்காரியம் எவ்வித தடங்கலுமின்றி நிச்சயமாக நிறைவேறிடும் .. கந்தப்பெருமானைக் கைதொழுதக்கால் எந்தக்காரியமும் நிறைவேறும் என்ற பரிபூரணமான நம்பிக்கையே காரணமாகும் .. கந்தனைப்போற்றுவோம் சகலமும் பெறுவோம் .. ஓம்தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்யப்ரசோதயாத் !! .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ... WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU HIS BLESSINGS AND CLEAR OUT ALL THE OBSTACLES IN YOUR PATH TODAY AND FOREVER MORE .. " OM MURUGA " ..

No comments:

Post a Comment