அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று திங்கட்கிழமையாதலால் சிவவழிபாடு சிறந்தது .. சிவாலயம் சென்று சிவனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாகவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. “ ஓம் நமசிவாய “ .. நவக்கிரகங்களில் சந்திரன் “மனோகாரகன்” ஆவார் .. இவரே மனிதர்களின் மனதில் எழும் எண்ணங்களை நிர்ணயிப்பவராக இருக்கிறார் .. குழப்பமான அல்லது தெளிவான முடிவெடுப்பதற்கு காரணகர்த்தா இவரே ! இந்த சந்திரனை சிவபெருமான் தலையில் சூடியுள்ளார் .. சந்திரனுக்கு ‘சோமன்’ என்ற பெயரும் உண்டு .. இதனால் சிவனுக்கு “சோமசுந்தரர்” .. “சோமசேகரன்” ..”பிறைநுதலான்” என்ற பெயர்களும் உண்டு .. எனவே மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்க திங்கட்கிழமைகளில் சிவவழிபாடு செய்வது சிறப்பு பெறுகிறது . சிவனைப்போற்றுவோம் சிவனின் அருட்கடாக்ஷ்ம் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . MAY YOUR DAY WILL BE FILLED WITH HAPPINESS AND VICTORY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. "OM NAMASHIVAAYA" ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment