ஷீரடி சாய் ஸ்லோகம் - ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமோ! பகவதே! ஸர்வலோக ஹிதங்கராய ! ஸர்வ துக்க வாரகாய ! ஸர்வ பீஷ்ட பலப்ரதாய ! ஸ்ரீஸாயிநாதாய நமஹ !! .. பொருள் - மும்மூர்த்திகளும் ஒருருவாய் ஷீரடிசாயியாய் அவதரித்தவரே! நமஸ்காரம்! இந்த உலகத்தை காப்பவரே ! உமக்கு நமஸ்காரம்! . பக்தர்களின் அனைத்து கஷ்டங்களுக்கும் நிவாரணமாய் இருப்பவரே ! உமக்கு நமஸ்காரம் ! பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவரே சாய்நாதரே ! தங்களுக்கு மீண்டும் .. மீண்டும் நமஸ்காரம் ! ! .. அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று அனைவராலும் போற்றி வணங்கப்படும் குருநாதர் ஷீரடி சாய்பாபாவினது தினமும் ஆகும் .. தங்களனைவருக்கும் குடும்பத்தில் மன அமைதியும் .. சந்தோஷமும் நிலவ சாய்நாதரைப் பிரார்த்திக்கின்றேன் .. பாபாவின் பொன்மொழிகள் - 1 - எது கிடைக்கிறதோ அதுவே போதும் என நினைத்துக் கொள்ளுங்கள் .. விரைந்து கிடைக்கவேண்டும் என ஒருபோதும் குறுக்குவழியை நாடாதீர்கள் .. உங்களைப்படைத்த சாயிதேவன் உங்களை எல்லா நேரங்களிலும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார் .. என்பதை அறியுங்கள் .. 2 - எறும்பின் காலில் கட்டப்பட்ட மணியின் ஓசையைக்கூட துல்லியமாகக் கேட்கிற காதுள்ள அவர் உங்கள் கூப்பிடுதலைக் கேட்கமாட்டாரா என்ன..? .. பொறுமையாக இருங்கள் .. விவேகமாக செயல்படுங்கள் .. 3 - சீட்டுக்குலுக்கிப்போட்டு ஏமாறுவதை விட சற்று கால அவகாசம் கொடுத்துக் காத்திருந்து பார்த்தால் நமக்கு வரவேண்டியது வரும் .. வராமல் தட்டிப்போவது சுவடு தெரியாமல் ஓடிப்போகும் .. 4 - இனியாவது எச்சரிக்கையாக இருங்கள் .. மற்றவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒருநிமிடம் பாபாவிடம் பிரார்த்தனை செய்யுங்கள் .. அவர்கள் இழந்த பொருள் அவர்களுக்கு வந்து கிடைக்கும் .. 5 - உங்கள் உச்சிமுதல் உள்ளங்கால்வரை நான் இருக்கிறேன் .. உங்கள் தொழில் எதுவானாலும் உங்கள் வேலையை என்னுடையதாக மாற்றிவிடுகிறேன் .. பார்வையும் பார்க்கப்படும் .. பொருளும் நானாக இருக்கிறேன் .. கவசமாகவும் இருக்கிறேன் .. 6 - எப்போதும் திருப்தி உள்ளவனாக இரு .. சஞ்சலத்திற்கோ கவலைகளுக்கோ எப்போதும் இடம் கொடுக்காதே ! நீ ! துவாரகாமாயியின் குழந்தை .. துவாரகாமாயியின் நிழலில் வாழ்பவர் சுகத்தையும் .. சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவராவார் .. 7 - பெருமையையும் .. அகங்காரத்தையும் ஒழித்துவிட்டு எள்ளளவும் அவற்றின் அடையாளம் கூட இருக்காதபடி விலக்கு .. உங்கள் இதயத்தே அமர்ந்து கொண்டிருக்கிற என்னிடம் உங்களை பூரணமாக சமர்ப்பிப்பீர்களாக .. பாபாவைப்போற்றுவோம் அவரது பரிபூரண திருவருளைப் பெறுவோமாக .. “ ஓம் சாய் ராம் “ .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. MAY HE SHOWER YOU WITH PEACE AND HAPPINESS .. " OM SAI RAM " ..

No comments:

Post a Comment