அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. தேய்பிறை அஷ்டமித் திதியாகிய இன்று காவல் தெய்வமான “பைரவரை” வழிபடுவது விசேஷம் .. கஷ்டங்கள் தீவிரமாகும் போது அவை காற்றில் பறக்கும் பஞ்சாகிவிடும் .. தங்களனைவரது சகலபிரச்சினைகளும் தீர்ந்து .. மனதில் அமைதியும் .. குடும்பத்தில் மகிழ்ச்சியும் .. செல்வவளம் பெருகவும் பைரவரைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே ! சூலஹஸ்தாய தீமஹி ! தந்நோ பைரவப்ரசோதயாத் !! .. ஒவ்வொரு தமிழ்மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்டலக்ஷ்மிகளும் பூமியில் இருக்கும் பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர் .. அப்படி வழிபடக்காரணம் என்ன..? பூமியில் வாழும்மக்களுக்கு அஷ்டலக்ஷ்மிகளின் செல்வச்செழிப்பை தினமும் அள்ளித் தருவதால் அவர்களில் செல்வவள சக்தி குறைகிறது .. அந்த செல்வவளசக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர் .. அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகுகாலத்தில் நாமும் பைரவரை வழிபட்டால் செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் .. அதனால் நமது ஏழுஜென்மங்கள் .. மற்றும் ஏழுதலைமுறை முன்னோர்களின் பாவவினைகள் தீர்ந்த மறுநொடியே நமது செல்வச்செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும் .. மஹாலக்ஷ்மி .. விஷ்ணுபகவான் .. குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்ததே ஸ்ரீசொர்ணபைரவரே ! .. கஷ்டங்கள் தீவிரமாகும் போது காவல் தெய்வமான வைரவரை வணங்குங்கள் .. அவை காற்றில் பறக்கும் பஞ்சாகிவிடும் ..காலபைரவரை வழிபாடு செய்வதில் எத்தனையோ முறைகள் இருப்பினும் மனதில் ஒருமுறை அவரை அன்புடன் துதித்து வேண்டினாலே போதும் ஓடோடி வருவார் .. கண்ணின் இமைபோல் காத்து நிற்பார் .. இவரின் அருளில்லாமல் முக்திகிட்டாது என்பதே உண்மையாகும் .. பைரவரைப் போற்றுவோம் அவரது அருட்கடாக்ஷ்ம் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD BAIRAVA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. "JAI BHAIRAVA" .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment