அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றி வணங்கப்படும் அற்புத மகான் ஸ்ரீ சீரடிபாபாவினது நாளும் ஆகும் .. அவரைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமையவும் .. தங்களது அனைத்து காரியங்களும் தடங்களின்றி வெற்றி பெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் ஷீரடி வாஸாய வித்மஹே! ஸச்சிதானந்தாய தீமஹி ! தந்நோ ஸாயி ப்ரசோதயாத் !! .. பொன்மொழிகள் - 1 - குருவின் பார்வையே ஒரு சிஷ்யனுக்கு உணவும் நீரும் ஆகிறது .. என்னை உங்கள் எண்ணங்கள்.. நோக்கங்கள் ஆகியவற்றின் ஒரே பொருளாக ஆக்கிக் கொள்வீர்களேயானால் நீங்கள் மேலான லட்சியத்தை அடைவீர்கள் .. 2 - உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும் .. ஆனால் உனக்கு என்மீது நம்பிக்கை இருந்தால் எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதைப்போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும் .. 3 - என்னை எவன் மிகவும் விரும்புகின்றானோ .. அவன் எப்போதும் என்னைக் காண்கின்றான் .. என்னைவிட்டு நீங்கிவிடில் இவ்வுலகமே அவனுக்கு சூனியமாய்த் தோன்றுகிறது .. அவன் எனது கதைகளைத் தவிர பிறவற்றைக் கூறுவதில்லை .. இடையிறாது அவன் என்னையே தியானித்து என் நாமத்தையே ஸ்மரணம் செய்கிறான் .. முழுமையும் எவன் தன்னைவிட என்னிடம் சமர்ப்பித்து என்னையே எப்போதும் நினைவில் கொண்டு இருக்கிறானோ அவனுக்கு நான் கடன்பட்டதாக உணர்கிறேன் .. 4 - பாபா ஒருபோதும் பட்டினி இருந்ததில்லை .. மற்றவங்களையும் பட்டினியாயிருக்க அனுமதிக்கவில்லை .. விரதம் இருப்பவன் மனது அமைதியாய் இருப்பது இல்லை .. வயிற்றில் உணவின் ஈரம் இல்லையாயின் அவர் தம் புகழை எந்நாவுடன் நாம் இசைக்கமுடியும் .. ? .. கடவுளை எந்தக் கண்களுடன் பார்க்கமுடியும் ..? .. அல்லது எந்தக் காதுகளால் தான் அவர் புகழை கேட்கமுடியும் .. ? .. எனவே பசியோடிருந்தாலோ மிகவும் உண்பதோ ஆகாது .. 5 - ஐயங்களும் கஷ்டங்களும் நம்மை சற்றே அசைத்து நம்பிக்கையை உறுதிப்படுத்தவே நம்மைச் சூழ்கின்றன .. நாம் வாழ்க்கையில் சோதனைக்குள்ளாக்கப்படுகிறோம் .. முழுநம்பிக்கையுடன் பாபாவைப் பற்றிக்கொண்டு நமது முயற்சிகளைத் தொடர்ந்து செய்வோமேயானால் நமது முயற்சிகள் அனைத்தும் முடிவாக வெற்றிமுடி சூட்டப்பெறும்.. 6 - மழைக்காலத்தில் கடல் ஆறுகளுடன் கலப்பதுபோல் பக்தர்களுடன் பாபா ஒன்றாகி அவர்களுக்குத் தம் ஆற்றலையும் .. அந்தஸ்தையும் அளிக்கிறார் .. 7 - பாபாவிடம் செல்ல பக்தன் எவ்வளவு அதிகம் பக்தியுடன் நம்பிக்கையுடன் இருக்கிறானோ .. அவ்வளவு விரைவில் அவன் மனநிறைவு அடையும் வண்ணம் அவனது எண்ணம் நிறைவேற்றப்படும் .. உலகம் போற்றும் பாபாவைப் போற்றி அவரது பரிபூரண திருவருளையும் பெறுவோமாக .. “ ஓம் சாய் ராம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. MAY HE BE WITH YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. HAVE A SUCCESSFUL DAY .. " OM SAI RAM " ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment