அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமும் ஆகும் .. எம்பெருமானைத் துதித்து தங்களனைவருக்கும் சகலதோஷங்களும் நீங்கி மகிழ்ச்சிகரமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. “ஓம் நமசிவாய “ .. சைவமக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவவிரதங்களில் ஒன்று ஒவ்வொருமாதமும் வளர்பிறை .. தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும் ..பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோஷ காலத்திற் சிவபெருமானைக் குறித்து அநுஷ்டிக்கும் விரதமாகும் .. துன்பங்களிலிருந்து நீங்கி இன்பத்தை எய்துவர் .. பிரதோஷ வேளையில் கடவுளை நினைத்துக் கொண்டால் (மாலை - 4.30 - 6.00 மணிவரை காலம் ) கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை .. அலுவலகத்தில் பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில் ஒரு விநாடி சிவனை நினைத்துக் கொள்வது நல்லது .. நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்போது இருகொம்புகளுக்கிடையே சிவனை பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும் .. ” நமசிவாய “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக .. தேவியோடும் .. முருகனோடும் .. சோமஸ்கந்தமூர்த்தியாகத் தரிசிப்பது கோடி புண்ணியமாகும் .. சிவனைத்துதித்து சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவீர்களாக .. “ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE BE WITH YOU AND GUIDES YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. " OM NAMASHIVAAYA " ..

No comments:

Post a Comment