அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய கார்த்திகேயனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் ஓர் பொன்னாளாய் மிளிரவும் .. உடல் நலமும் .. மனநலமும் புத்துணர்வு பெறவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வரபுத்ராய தீமஹி! தந்நோ சுப்ரமண்யப்ரசோதயாத் !! முருகன் திருவுருவம் ஒரு புரிதல் - முருகக் கடவுள் முழுமுதற்கடவுளான விநாயகரின் இளையவர் .. சிவபார்வதியரின் இரண்டாவது புதல்வர் .. அழகின் இலக்கணமாகிய இவர் கார்த்திகை நக்ஷ்த்திரத்தில் உதித்ததால் கார்த்திகேயன் என்றும் .. ஆறுமுகங்களைக் கொண்டதால் ஷண்முகன் என்றும் .. அன்போடு போற்றப்படுபவர் .. மற்ற தெய்வங்களைப் போலவே முருகனின் உருவமும் முழுமையான தத்துவத்தை உணர்த்துகிறது .. முருகனின் கையில் வேலாயுதம் ஏந்தியுள்ளார் .. பெரும்பாலான இந்துமத தெய்வங்களின் கைகளில் அழிவிற்கான ஆயுதங்களையே ஏந்தியுள்ளனர் .. இவை நம்மைப் பீடித்திருக்கும் வாஸனைகளாகிய ஆசைகளை அழிக்கவேண்டி உருவகப்படுத்தப்பட்டவை ..வாஸனைகளும் அவற்றால் ஏற்படும் ஆசைகளுமே நம் முதல் தடை .. ஆசையில்லா மனிதன் கடவுளை உணர்கிறான் .. வாஸனைகளுடன் சேர்ந்த கடவுள் மனிதராகிறான் .. முருகனின் சக்தி ஆயுதமாகிய வேல் இந்த வாஸனைகளை அடியோடு அழிக்கவல்ல சக்தியாக உருவகம் செய்து பிரார்த்திக்க வேண்டும் .. முருகனின் வாகனம் மயில் .. மயிலானது தன்னுடைய அழகிய தோற்றத்தில் மதிமயங்கச் செய்யவல்லது .. மனிதன் தன்னுடைய உடல் அழகு .. புத்திசாலித்தனம் .. மற்றும் அலைபாயும் மனது .. ஆகியவற்றின்மீதே மோகம் கொண்டுள்ளான் என்பதை மயில் உணர்த்துகிறது .. அவன் தன்னைச்சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியும் .. புரியும் .. விடயங்களையே சிந்தித்து தன்னை ஒரு மனித எல்லைக்குள் அடைத்துக் கொள்கிறான் .. மயிலின் கழுத்தின் உண்மையான நிறம் நீலம் .. நீலநிறம் எல்லையற்ற தன்மையை உருவகப்படுத்துகிறது .. எப்படி மயில் தோகை விரித்து ஆடுகையில் நம் கவனம் அதனுடைய அழகில் மயங்கி உண்மையான நீலநிறம் புலப்படுவதில்லையோ அதேபோல் மனிதன் புற அழகினில் மயங்கி எல்லையற்றதாகிய தன்னுள் உறையும் ஆத்மா எனும் இறைவனை உணரமுடிவதில்லை .. தன்னுடைய உடல் .. மன ..புத்தியினால் ஏற்பட்டிருக்கும் அகந்தையை அகற்றி நீலநிறமாகிய மயில்மேல் முருகன் செல்வதைப்போல .. தன் கவனத்தை உள்திரும்பி ஆன்மாவில் நிலைக்கச் செய்யவேண்டிய கடமையை உணர்த்துவதே மயில் வாகனத்தின் தத்துவம் .. முருகனின் மயில் வாகனத்தின் காலடியில் கருநாகம் பிடிபட்டிருக்கும் ..நாகம் கொல்லப்படுவதில்லை .. ஆனால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் .. கருநாகம் உணர்த்துவது ஒருவனுடைய ‘அகந்தை’ நாகத்தின் விஷம் .. நாகத்தினை எதுவும் செய்வதில்லை .. ஆனால் அது வெளிப்பட்டாலோ அதனால் ஏற்படும் ஆபத்து பேரபாயம் .. அதேபோல் ஒருவனுடைய அகந்தை உள்ளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டால் அதனால் ஏதும் துன்பம் இல்லை .. ஆனால் அதையே வெளிக்காட்டினால் அதனால் ஆசைகள் ஏற்பட்டு பல கெட்டவிளைவுகள் ஏற்படும் .. ஆகவே விஷஜந்துவாகிய அகந்தையை காலடியில் போட்டுக் கட்டுப்படுத்தி புற அழகினிலிருந்து கவனத்தை உட்திருப்பினால் மட்டுமே இறைவனை அறியமுடியும் .. என்கிற தத்துவத்தினை உணர்த்துகின்றது .. முருகனின் மற்றொரு உருவம் ஷண்முகன் எனப்படும் ஆறுமுகம் .. இறைவன் பஞ்சபூதங்கள் .. அல்லது ஐந்து புரிதல் உறுப்புகள் ( Five Sense of Organs ) மற்றும் ஒரு மனதின் வாயிலாக காட்சியளிக்கிறான் .. உள்ளிருக்கும் ஆத்மாவிற்கு எந்தவிதமான உருவகப்படுத்துதலும் கிடையாது .. மனமானது ஐந்து புரிதல் உறுப்புக்கள் மூலம் தன்னை ஒருமனிதனாக வெளிப்படுத்துகிறது .. அதனை அடக்கியாள்பவனே தன்னில் இறைவனை உணர்வான் .. இத்தகைய மேலான முருகனின் திருவுருவம் உணர்த்தும் தத்துவத்தினை உணர்ந்து அவன்பாதம் பணிந்து நாம் உண்மையினை உணர்வோமாக .. “ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS "OM SARAVANA BHAVAAYA NAMAHA"


No comments:

Post a Comment