குரு ஸ்தலம், ராகு ஸ்தலம், சனி ஸ்தலம், செவ்வாய் ஸ்தலம் என்று நவக்கிரக பரிகாரம் வேண்டி பல பல திருக்கோவில் செல்லும் பக்தர்களே நீங்கள் செல்லும் திருக்கோவில் மூல கடவுளாக இருப்பவர் எல்லாம் வல்ல எம்பெருமான் மாபெரும் கருணையுடைய ஈசன் தானே, அப்படி இருக்க நவகிரகங்களை மட்டும் வணங்கி பூஜைகள் செய்து பலன்பெறதாக நீங்கள் நினைத்தல் அது மடமை. நீங்கள் பெற்ற பலனை கொடுத்தவர் மாபெரும் கருணையுடைய ஈசன். ஆனால் பெரும்பாலனோர் அந்த ஆலயத்தில் உள்ள நவக்கிரகதை மட்டும் வணங்கிவிட்டு வருகின்றனர் இது என்ன செயல் ??. அந்த நவகிரகங்கள் ஈசன் அருள்வேண்டி வழிபட்ட திருக்கோவில் அது. நாம் நமது மடமையால் ஈசனை மறந்து நவகிரகங்களை மட்டும் வணங்கி பூஜைகள் செய்து என்ன பெறமுடியும். அந்த ஆலயத்திற்கு சென்றதால் கிட்டிய பலனை போற்றும் நீங்கள். அந்த ஆலயத்தில் உள்ள மூலகடவுளான ஈசனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டால் கிடைக்கும் பலன் பற்றி கூறவும் வேண்டுமோ. நீங்கள் வழிபாடும் அணைத்து தெய்வங்களிடம் பெற்ற அருளும் பொருளும் எல்லாம் வல்ல நாமில் உள்ள மாபெரும் கருணையுடைய படைப்புகளின் நாயகன் எங்கள் சிவபெருமானிடம் பெற்றவை தான். நமசிவாய நமசிவாய —


No comments:

Post a Comment