அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று நவக்கிரகங்களின் நாயகன் சூரியபகவானின் ஆதிக்கம் பூமியில் நிறைந்த நாளாகும் .. பயன்கருதாது தன் அன்றாடப் பணியைச் செய்துவருபவருமான சூரியபகவானைத் துதித்து தங்கள் அனைவருக்கும் சகலகாரியங்களிலும் வெற்றியும் .. மகிழ்ச்சியும் உண்டாவதாக .. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாஸஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூரியப்ரசோதயாத் !! .. சூரியன் என்ற தேவன் ஏழுகுதிரை பூட்டிய தேரில் உலாவருகிறார் என்ற ஆன்ம்மீகப்பார்வையும் .. வானவில்லின் ஏழு நிறப்பிரிகையையும் குறிக்கும் இயற்பியல் அறிவியியல் நோக்கையும் ஒப்பிட்டுப்பார்ப்பதில் சுவாரசியமான ஆழ்ந்த பொருள் உள்ளது .. ஜோதிடரீதியாக சூரியன் ஆத்மக்கிரகம் என குறிப்பிடப்படும் .. அதாவது உடல்சக்தியையும் .. மனோசக்தியையும் தாண்டி நமக்கு உள்ள ஆறாம் அறிவுசார்ந்த உயிரின் தன்னியல்பான வெளிப்பாட்டைக் குறிப்பிடும் கிரகமாக சூரியன் உள்ளது .. ஒருவரது வாழ்க்கையில் அவரது தந்தையார் .. ஆன்மீகநிலை அரசாங்கவழி .. ஆதாயங்கள் .. இதயநோய்கள் .. தோல்வியாதிகள் .. ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் குறியீடாக சூரியன் அமைகிறது .. சூரியனைப் போற்றுவோம் அவரருளைப் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. MAY YOUR SUNDAY BE FILLED WITH PEACE .. LOVE AND HAPPINESS WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. 'JAI SURYA BAGAVAN'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment