ஸ்ரீவிக்னேஷ்வரர் துதி - கஜானனம் பூதகணாதி ஸேவிதம் ! கபித்த ஜம்பூபலஸார பக்ஷிதம்! உமாஸுதம் ஸோகவினாச காரணம் ! நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம் !! .. அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று ” சங்கடஹர சதுர்த்தி “ .. விநாயகரைத் துதித்து தங்களனைவரின் அனைத்து சங்கடங்களும் பனிப்போல் நீங்கி .. இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாகவும் .. மகிழ்ச்சிகரமான நாளாகவும் அமைந்திட வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! வக்ரதுண்டாய தீமஹி ! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! .. பிள்ளையாரை வழிபட ”சங்கடஹர சதுர்த்தி “ நாள் மிகவும் ஏற்றது .. பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளையே ’சங்கடஹர சதுர்த்தி என்பர் .. கர்வமிகுதியால் பிள்ளையாரின் கோபத்துக்கு ஆளான சந்திரன் தன் உடலில் பொலிவிழந்து வருந்தினான் .. இறுதியில் பிள்ளையாரிடமே சரணடைந்தான் .. பிள்ளையார் அருள்புரிந்ததோடு “ சங்கடஹர சதுர்த்தி உதய நேரத்தில் .. எம்மை பூஜிப்பவர் யாவருக்கும் இன்னல்கள் நீக்கி அருள்புரிவேன் “ என்றருளினார் .. என்கிறது புராணத் தகவல் .. ஆகவே சங்கடஹர சதுர்த்தி நாளில் அதிகாலையில் நீராடி விரதமிருந்து பிள்ளையாரை வழிபட நல்லபலன் கிட்டும் என்பது ஐதீகம் .. மாலைவரை உணவு உண்ணாமல் இருக்கவேண்டும் .. முடியாதவர்கள் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம் .. மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று நெய்விளக்கு ஏற்றி அங்கு நடக்கும் பூஜையில் கலந்துகொண்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும் .. விநாயகரைப் போற்றி வணங்குவோம் ! தங்களனைவருக்கும் எதிலும் வெற்றி ! என்றும் வெற்றி நிச்சயம் ! .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. MAY THE DIVINE BLESSINGS OF LORD GANESH BRINGS YOU ETERNAL BLISS AND FULFILL ALL YOUR WISHES .. "JAI GANESH"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment