உருவாய் அருவாய் உளதாய் நிலதாய் .. மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் .. கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய் .. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !! .. அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய கார்த்திகேயனைத் துதித்து தங்கள் அனைவருக்கும் இஹபர சுகங்கள் பெற்று .. துயர்களைந்து மகிழ்ச்சிகரமான வாழ்வு மலர்ந்திட வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வர புத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்யப்ரசோதயாத் !! .. ஞானமே உடலாகவும் .. இச்சாசக்தி .. கிரியாசக்தி .. ஞானசக்தி என்னும் முச்சக்திகளை மூன்று கண்களாகவும் .. இப்பெரிய உலகமே கோயிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்றத் தனிச்சுடராகத் திகழ்பவன் முருகனே ! .. தன் அடியவர் வேண்டும் நலன்களை எல்லாம் அவர்கள் வேண்டியவாறே விரும்பிக் கொடுத்தருளும் பெருந்தன்மையான குணம்வாய்ந்தவன் .. நம் உள்ளத்தைக் கவரும் பண்புடையான் என்று உணர்ந்து முருகனை அடைந்தால் அவன் நம் கர்மத்தைப் போக்குவான் .. நம் துன்பத்தை அழிப்பான் .. முருகனை அன்புடன் வழிபட்டு முருகா ! முருகா ! எனக் கூறித் தியானிப்பவர்கள் என்றும் குறையாத பெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள் .. அவர்களை ஒருபோதும் எத்தைகைய துன்பமும் அணுகாது .. ஓம் முருகா ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A VERY HAPPY MORNING AND A BLESSED TUESDAY .. MAY LORD MURUGA SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. "OM MURUGA" ..


No comments:

Post a Comment