அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பூமியில் சூரியாதிக்கம் நிறைந்த நாளாகும் .. தங்களனைவரின் நல்லாரோக்கியத்திற்கும் .. இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாய் அமைந்திடவும் சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாஸஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! இயற்கை ஏற்றிவைத்த ஒளிவிளக்காகிய சூரியன் தன் அருள் ஒளியால் அறியாமை என்னும் இருளகற்றி அறிவென்னும் ஒளிச்சுடரைத் தூண்டும் சக்திமிக்க பிரத்யட்ச தெய்வ வடிவாகத் திகழ்கிறான் .. நவக்கிரகங்களின் நாயகன் .. என்றழைக்கப்படுபவர் சூரியன் .. தினமும் நமக்கு தரிசனம் கொடுக்கும் கிரகம் ஒளியைத் தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மைக் கிரகம் .. அதிகாரம் .. ஆட்சி .. ஆளுமை .. போன்றவற்றுக்கு அதிகாரம் உள்ளவர் இவர் .. சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது .. ஐ.ஏ.எஸ் .. ஐ.பி.எஸ் அதிகாரிகள் .. தலைமை செயலாளர்கள் .. மிகப்பெரிய அதிகாரப் பதவிகள் .. ஆகியவற்றில் ஒருவர் அமர்வதற்கு சூரியனின் அனுக்கிரகம் அவசியம் .. இவைமட்டுமல்லாமல் ஒரு நிகழ்ச்சிக்கோ .. பத்துபேர் கொண்ட குழுவுக்கோ தலைமைவகிக்க வேண்டும் என்றாலும் சூரியனின் அருள் தேவை .. தலைமைப்பீடம் என்பது சூரியபலத்தினால் மட்டுமே கிடைக்கும் .. தினசரி ஆதித்யஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம் .. கோதுமையில் செய்த சப்பாத்தி .. ரொட்டி .. சாதம் போன்ற உணவுப்பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்கலாம் .. சூரியவழிபாடு செய்து .. கிரஹதோஷங்கள் நீங்கி எல்லாவளமும் பெறுவீர்களாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. MAY HE GUIDES YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE "JAI SURYA DEV " ..


No comments:

Post a Comment