PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஏகாதசித் திதியாகிய இன்று மஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன் நாளாக அமைந்திடவும் .. செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணுப்ரசோதயாத் !! வளர்பிறையில் வரும் ஏகாதசி .. தேய்பிறையில் வரும் ஏகாதசி என மாதத்துக்கு இரண்டாக ஒருவருடத்தில் 24 ஏகாதசிகள் வரும் .. ஒருசில வருடங்களில் ஒரு ஏகாதசி அதிகமாகி 25 ஏகாதசிகளும் வருவதுண்டு .. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பலன்கள் வழங்கினாலும் .. வைகுண்டபதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும் .. பங்குனி வளர்பிறையாகிய இன்றைய ஏகாதசியை “ ஆமலகி ஏகாதசி “ என்றழைப்பர் .. நெல்லிமரத்தடியில் பரசுராமனின் படத்தை வைத்து பூஜைசெய்து நெல்லிமரத்தை 108முறை சுற்றி பூபோட்டால் புண்ணியநதிகளில் நீராடிய பலனும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனும் கிட்டும் .. நெல்லி திருமாலின் தோன்றலாகும் .. எல்லா தெய்வசக்திகளும் கோமாதா.. காமதேனுவுள் அடக்கம் போல நலன்பயக்கும் சக்திகள் யாவும் நெல்லியுள் அடக்கம் .. ஆதிசங்கரருக்கு அளிக்கப்பட்ட ஒரு நெல்லி அவரை “கனகதாரத் துதியை” பாடச் செய்து தங்கமழையை கொட்டுவித்ததுபோல பெரும்பயன் அருளவல்லது .. மஹாவிஷ்ணுவைப் போற்றி வணங்கி சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HIS DIVINE BLESSINGS BRINGS YOU HAPPINESS AND ETERNAL BLISS .. " OM NAMO NAARAAYANAA " ..


No comments:

Post a Comment