அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வணக்கங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய கார்த்திகேயனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் சகலசம்பத்துக்களும் பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஓம் கார்த்திகேயாய வித்மஹே ! சக்திஹஸ்தாய தீமஹி ! தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !! பொருள் - சக்தி என்னும் வேலாயுதத்தை கையில் ஏந்தி நிற்கும் கார்த்திகேயனே ! நீ நம் அறிவைப் பிரகாசமாக்கி நல்வழியில் நடத்துவாயாக ! .. ஸ்ரீ சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய குரு - கவசத்தில் முருகனின் மூலமந்திரம் உள்ளது .. அந்த மந்திரத்தை தியானித்து உரு ஏற்ற முருகனின் அருள்கிடைத்து மும்மலங்கள் ஆகிய .. ஆணவம் .. கன்மம் .. மாயை நம்மைவிட்டு அகன்று முக்தி நமக்கு சித்தியாகுமாம் .. முக்தியைத் தேடி எங்கும் அலையவேண்டாம் என்று சொல்கிறது ஸ்கந்த குருகவசம் .. மூலமந்திரம் - ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் கலீம் க்லௌம் ஸெளம் ! நமஹ ! கார்த்திகேயனைப் போற்றுவோம் .. அவனருட்கடாக்ஷ்ம் பெறுவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE BE WITH YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE —


No comments:

Post a Comment