அவையம் ஆனவரே
பன்வேல் பாலகரே
 உம்மை
போற்றித் துதிக்கின்றேன் 
இடர்கள் வந்தாலும் 
உனை இடைவிடாது துதிக்கின்றேன்

உன்
கடைக்கண் பார்வை என் மீது பொழிய 
உவகை நானடைந்தேன்
பகைமை, கோபம் ,காழ்ப்புணர்ச்சி ,துன்பம்
இவைகள் நீக்கி விட்டாய்
தகைமை எனக்குண்டு 

உன் பக்தன் ஆனதனால்
மிகவும் தாழ்வாக ஒரு வரமே நான் கேட்பேன்
வாழும் காலமெல்லாம் 

குருவின் அன்போடு சேர்த்து
உன் திருவருள் அருள்வாயே


No comments:

Post a Comment