PANVEL BALAGAR
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமும் வருவதால் பிரதோஷவேளையில் மாலை 4.30 - 6.00 மணிவரையிலான நேரத்தில் சிவாலயம் சென்று நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கிடையில் சிவலிங்கத்திற்கு நடக்கும் அபிஷேகத்தைக் கண்டு தரிசித்தால் பாவங்கள் .. கடன்தொல்லை .. வறுமை .. நோய் .. பயம் .. மரணவேதனை .. அனைத்தும் நீங்கும் .. தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாகவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றியடையவும் சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ரப்ரசோதயாத் !! பிரதோஷ வரலாறு - தேவேந்திரன் தனது வாகனமான ஐராவதத்தின் மீது (வெள்ளை யானை) அமர்ந்து சந்தோஷத்துடன் ஊர்வலம் வந்து கொண்டிருந்தான் .. அப்போது துர்வாச முனிவர் எதிரில் வந்தார் .. தேவேந்திரனது ஊர்வலம் அவர் உள்ளத்தில் ஏதோ மாறுதலை உண்டாக்கியது .. மேலும் எப்போதும் “ பிடிசாபம்” என்று சொல்லும் துர்வாசர் தன் கையில் இருந்த மலர்மாலையை மிகுந்த அன்போடு தேவேந்திரனை வாழ்த்தும் விதமாக அவரிடம் கொடுத்தார் .. தேவேந்திரன் அதை அலட்சியமாக யானையின் தலையில் வைத்தான் .. துர்வாசரின் கண்கள் சுருங்கின .. யானையோ அந்த மாலையை எடுத்துத் தனது காலடியில் போட்டு மிதித்தது .. வெடித்தார் துர்வாசர் .. “ தேவேந்திரா ! அவ்வளவு ஆணவமா உனக்கு .. ? வெறுக்கை (செல்வத்தின்) மேல் வெறுக்கை (வெறுப்பு) கொண்டவர்கள் நாங்கள் .. லக்ஷ்மிதேவியின் அருட்கடாக்ஷ்ம் உனக்கு இன்னும் பரிபூரணமாகக் கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில் அந்த தேவியின் பிரசாதத்தை உனக்கு அளித்தேன் ஆனால் செல்வச்செருக்கில் ஊர்வலம் வரும் நீயோ அதை அலட்சியப்படுத்திவிட்டாய் .. உன் ஆணவத்துக்குக் காரணமான அந்தச் செல்வம் முழுவதையும் நீ இழக்கக் கடவாய் “ என சாபம் கொடுத்தார் .. உத்தமரின் சாபம் உடனே பலித்தது .. தேவேந்திரனது அனைத்து செல்வங்கள் அவனைவிட்டு நீங்கி மறைந்தன .. பாற்கடலைக் கடைந்தால் தான் இழந்த செல்வம் முழுவதையும் திரும்பப் பெறமுடியும் என்ற நிலை .. ஆகவே தேவர்களும் .. அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைவது என முடிவாயிற்று .. திருப்பாற்கடலில் எல்லாவிதமான மூலிகைகளையும் போட்டார்கள் மந்தரமலையை மத்தாக்கி .. வாசுகி என்ற பாம்பைக் கயிறாகச் சுற்றி பாற்கடலைக் கடையத் தொடங்கினர் .. வாசுகியின் தலைப்பக்கத்தை அசுரர்களுக்கும் வால்பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டார்கள் படுவேகமாகப் பாற்கடல் கடையப்பட்டது .. சோதனைபோல மத்தான மந்தரமலை கடலுக்குள் அமிழத்தொடங்கியது .. உடனே மஹாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து அதைத்தாங்கி மூழ்காதபடி தடுத்தார் .. பழையபடியே கடலைக் கடைந்தார்கள்.. அப்போது வேறு ஒரு விபரீதம் விளைந்தது .. ஆலகாலவிஷம் எழுந்தது .. அனைவரும் அங்கிருந்து ஓடி நந்திதேவரிடம் அனுமதி பெற்றுக் கயிலாயத்தின் உள்ளே போய் சிவபெருமானின் திருவடிகளில் விழுந்தார்கள் .. ”ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியே ! உமையருபாகா ! கங்காதரா ! கடுமையான இந்த விஷத்தில் இருந்து எங்களைக் காக்கவேண்டும் ஸ்வாமி ! அபயம் !அபயம் என்று வேண்டினர் .. அருகில் இருந்த அவரின் மறுவடிவான சுந்தரரைப் பார்த்து “கடும் விஷத்தைக் கைகளில் எடுத்துக்கொண்டு வா “ என்றார் விஷத்தைக் கொண்டுவந்தார் சுந்தரர் .. அவர் ஆலகால விஷத்தைக் கொண்டு வந்ததால் ஆலகால சுந்தரர் எனப்பட்டார் .. சிவபெருமான் விஷத்தை வாங்கி அதை உண்டார் .. அதன் காரணமாக அவருக்கு (திரு) நீலகண்டர் .. ஸ்ரீகண்டன் என்ற திருநாமங்கள் உண்டாயின .. சிவபெருமான் விஷத்தை உண்டபோது சகல உலகங்களும் இவருக்குள் இருக்கின்றன .. இந்த விஷம் உள்ளுக்குள் இறங்கிவிட்டால் உலகங்களில் இருக்கும் ஜீவராசிகள் அனைத்துக்கும் துயரம் உண்டாகும் .. விஷம் வெளியே வந்துவிட்டாலோ தேவர்களும் அசுரர்களும் துயரம் அடைவார்கள் .. யாருக்கும் எந்தத் துயரமும் ஆலகாலவிஷத்தால் உண்டாகக் கூடாது என்ற கருணை உள்ளத்துடன் அம்பிகை சிவபெருமானின் கழுத்தைத் தடவினாள் .. விஷம் அங்கேயே நின்றுவிட்டது என்றும் சொல்வது உண்டு .. அனைவரும் மனக்கலக்கம் தீர்ந்தார்கள் .. அவர்கள் மகிழ்ச்சி அடையும் பொருட்டு ரிஷபத்தின் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவில் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார் .. மற்ற தெய்வங்களும் மகாதேவர்களும் அந்த ஆனந்ததாண்டவத்தை தரிசித்தனர் .. இவ்வாறு சிவபெருமான் அருள்புரிந்த காலமே பிரதோஷவேளை .. (மாலை 4.30 - 6.00 மணிவரை) சிவனையும் நந்திகேஸ்வரரையும் வணங்கி இந்த ஸ்லோகத்தை 18முறை காலை .. மாலை .. இருவேளையும் பாராயணம் செய்து வந்தால் சிவன் அருள்கிட்டி நினைத்தது நிறைவேறும் .. ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ! ஸித்தார்த்தஹ் ஸித்தஸாதக ! பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச ! விபனோம்ருது ரவ்யய !! .. சிவனைப்போற்றுவோம் .. சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவோமாக .. ஓம் நமசிவாய .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. MAY THE DIVINE BLESSINGS OF LORD SHIVA BRING YOU ALL ETERNAL BLISS .. "OM NAMASHIVAAYA" ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment