PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022
அருள்மிகு சிந்தாமணி நாத சுவாமி திருக்கோவில்
(அர்த்த நாரீஸ்வரர் திருக்கோவில்), 
வாசுதேவ நல்லூர் (திருநெல்வேலி மாவட்டம்).
தென் பகுதியிலிருக்கும் அர்த்த நாரீஸ்வரர் கோவில். இந்த கோவில் மதுரை – செங்கோட்டை சாலையில் (NH 208) – மதுரையிலிருந்து 115 KM தூரத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 40 KM தூரத்திலும் அமைந்திருக்கிறது. பஸ் வசதி நிறைய. வடக்கிலிருந்து வந்தால் (ராஜபாளையம் பகுதியிலிருந்து) பழைய பஸ் ஸ்டாண்டு நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் கோவில் அமைந்துள்ளது.
அருமையான பெரிய கோவில். முன்னால் 2 தேர்கள் நிற்கின்றன. புதிய தேர் தகரத்தினால் மூடி போட்டு பாதுகாக்கப் படுகிறது. இன்னொரு பழைய தேர் – அருமையான சிற்பங்களுடன் – வெயிலில் காய்ந்து, முறையாக பராமரிக்கப் படாமையால் சிதிலமடைந்து வருகிறது; வேதனையாக இருக்கிறது.
கோவிலுக்கு முன்னால் அழகான தெப்பம் இருக்கிறது, நடுவில் அழகான மண்டபம் இருக்கிறது. தெப்பத்தில் தண்ணீர் இல்லை.
கோவில் முகப்பு அருமையாக இருக்கிறது. கோவிலுக்குள் நுழைவதற்கு முன் நிறைய காலி இடம் இருக்கின்றது. திருவிழா சமயம் எவ்வளவு கூட்டம் வந்தாலும் தாங்கும்.
கோவில் பிரகாரம் அருமையாக நிறைய மரங்களுடன், மூலிகை, மலர் செடிகொடிகளுடன் அமைந்திருக்கிறது. இந்த கோவிலின் ஸ்தல விருட்சம் – புளிய மரம். அதை படம் எடுத்து போட்டிருக்கிறேன். அதன் கீழே நாகர் சிலை இருக்கிறது. ஒரு பெண்மணி பாலபிஷேகம் செய்து வழிபடும் காட்சி காணலாம்.
வெளிப்பிரகாரத்திலேயே மதிய அன்னதானத்திற்கான சமையல் நடக்கிறது.
இறைவன் அர்த்த நாரீஸ்வரர் கோலத்தில் இருக்கிறார். நன்கு அருமையாக அமைந்த கோவில். அருமையாக பராமரிக்கப் படுகிறது. 
குற்றாலம் செல்லும் நண்பர்கள் பார்க்க வேண்டிய கோவில்.
நன்றி நண்பர்களே.


No comments:

Post a Comment