அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று .. அற்புதமகான் ஷீரடிபாபாவினது நாளும் ஆகும் .. அவரைத் துதித்து தங்கள் அனைவருக்கும் மலர்ந்திருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் ஷீரடிவாஸாய வித்மஹே ! ஸச்சிதானந்தாய தீமஹி ! தந்நோ ஸாயி ப்ரசோதயாத் !! .. ஒருமுறை பாபாவை அன்புடன் நோக்கினால் அவர் ஆயுள்முழுவதற்கும் நம்முடையவர் ஆகிவிடுகிறார் .. உண்மையான அன்பைத் தவிர நம்மிடம் அவர் வேறெதையும் எதிர்பார்ப்பதில்லை .. நாம் கூப்பிடும்போது காப்பாற்ற ஓடிவருகிறார் .. அந்நேரத்தில் காலமோ .. நேரமோ .. அவருக்குக் குறுக்கே நிற்கமுடியாது .. சதா சர்வகாலமும் அவர் நமக்குப் பின்னால் உறுதியாக நிற்கிறார் .. அவர் எங்கு எவ்வாறு எந்த விசையை இயக்குவார் என்று நமக்குத் தெரியாது .. அவருடைய செயல்கள் புரிந்துகொள்ள முடியாதவை .. ஒருமுறை பக்தர் ஒருவர் உலக ஆதாய நன்மையை நாடி பாபாவிடம் மக்கள் போவதை ஆட்சேபித்தபோது .. பாபா “ஒருபோதும் அப்படி சொல்லாதே ! எனது மக்கள் முதலில் அதற்காத்தான் என்னை நாடிவருகிறார்கள் தமது ஆசைகள் நிறைவேறி வாழ்க்கையில் சௌகரியத்தை அடைந்தபிறகு அவர்கள் என்னைப் பின்பற்றி ஆத்மீகத்துறையிலும் முன்னேறுகிறார்கள் .. என்னைச்சேர்ந்தவர்களை தொலைதூரத்தில் இருந்தெல்லாம் பல்வேறுவித முகாந்திரமாக இங்கே வரவழைக்கிறேன் .. அவர்கள் தம் இஷ்டப்படி தாமே வருவதில்லை .. நான் அவர்களை என்னிடம் இழுத்துக் கொள்கிறேன் “ என்றார் .. இச்சொற்கள் இன்றும் பலித்து வருகின்றன .. மிக்க மனக்கலக்கத்துடன் எதிர்பார்க்கக்கூடிய விஷயம் நமக்கு நன்மை செய்வதாக இருக்கவேண்டும் .. யாருக்கு எது பிராப்தமோ அதற்கு தக்கவாறே நான் அளிப்பேன் அளிக்கப்பட்டது எதுவாக இருந்தாலும் அது என் சங்கல்பமே என்பதை நீங்கள் அறிந்தால் என்னை அறிந்து கொண்டவரேயாவர் .. ( பாபாவின் பொன்மொழிகள் ) பாபாவைப் போற்றுவோம் அவரது அன்பும் ஆசியும் பெறுவோமாக ..” ஓம் சாய் ராம் ” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. MAY HE BE WITH YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. " OM SAI RAM " ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment