அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று சஷ்டித் திதியும் கூடிவருவதால் கந்தனைத் தொழுது தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் வெற்றிவேல் முருகன் அருள் புரிவாராக .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வர புத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்யப்ரசோதயாத் !! .. வல்வினைநீக்கி .. வரும்வினைபோக்கி .. செல்வமும் .. செல்வாக்கும் தந்து .. அழகும் .. அறிவும் .. தந்திடும் வள்ளிமணாளனை .. வடிவேலவனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது சஷ்டிவிரதமாகும் .. அகப்பை எனும் உள்ளத்தில் நல்ல எண்ணங்களும் .. பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் .. நம் மனதில் உள்ள அசுர எண்ணங்களை அழிப்பதே விரதங்களின் நோக்கமாகும் .. அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானம் உதவுவதைப்போன்று மனவளர்ச்சிக்கு சமயம் அடிகோலுகின்றது .. முருகனைப்போற்றித் துதித்து இகபர சௌபாக்கியங்களைப் பெறுவீர்களாக .. “ ஓம் சரவணபவாய நம ஓம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. MAY LORD MURUGA BLESS YOU AND BE WITH YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM SARAVANA BHAVAAYA NAMA OM " ..

No comments:

Post a Comment