அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று செவ்வாய்க்கிழமையும் .. கார்த்திகைவிரதமும் சேர்ந்து வருவதால் முருகனாலயம் சென்று முருகனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாகவும் .. சகலசம்பத்துக்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ கலியுக தெய்வமான கார்த்திகேயனைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்யப்ரசோதயாத் !! .. செவ்வாயன்று முருகனை வழிபடுவதன் சிறப்பு - செவ்வாய்க்கு அதிபதி முருகன் என்பதால் முருகனுக்குரிய கிழமை செவ்வாயாக உள்ளது .. இகபர சௌபாக்கியம் அருள்பவன் முருகனே ! இப்பிறவிக்குத் தேவையான பொருட்செல்வத்தையும் .. மறுபிறவிக்குத் தேவையான அருட்செல்வத்தையும் தன் பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் முருகன் .. முன்செய்தபழிக்குத் துணை முருகா .. என்னும் நாமங்கள் முருகனுக்கு உண்டு என்பார் அருணகிரிநாதர் .. அதனால் “முருகா “ எனும் நாமத்தைச் சொன்னால் முன்வினைப்பாவம் நீங்கி புண்ணியம் சேரும் .. முருகனைப் போற்றுவோம் .. குடும்பத்திலும் .. மனதிலும் அமைதி கிட்டும் .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM MURUGA " ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment