அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று “காரடையான் நோன்பு” .. மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் பெண்கள் தங்களது கணவரது நல்வாழ்விற்காக நோற்கும் நோன்பாகும் .. சாவித்திரி தன் கணவரை எமதர்மராஜனிடமிருந்து மீட்டது இந்தநாளில் தான் .. சுமங்கலிப்பெண்கள் தங்கள் கழுத்தில் மங்கலநாண் நிலைக்கவும் .. தங்களது கணவன் நீண்ட ஆயுளோடு வாழவேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி இந்த விரதம் இருப்பார்கள் .. கார்காலத்தில் (முதல்போகம்) விளைந்த நெல்லில் இருந்து குத்தி எடுத்த அரிசியை மாவாக்கி .. இனிப்பு .. காராமணி கலந்து தயாரிக்கும் அடையை சாவித்திரிதேவிக்கு நைவேத்தியமாகப் படைப்பர் .. இதனால் இந்நோன்பு ’காரடையான் நோன்பு ’ எனப் பெயர் பெற்றது .. பிறமாநிலங்களில் இதை ‘சாவித்ரி விரதம்’ என்கின்றனர் .. இந்நாளில் பூஜை அறையில் மாக்கோலம் இட்டு கலசம் வைத்து பூஜிக்கவேண்டும் .. கலசத்தின் மீது மாவிலை .. தேங்காய் .. வைத்து அலங்கரித்து சந்தனம் .. குங்குமம் இட்டு அதன்மீது மஞ்சள் கயிறுகளை அணிவிக்கவேண்டும் .. ஸ்லோகம் - தோரம் கருண்ஹாமி ஸுபஹே ! ஸஹாரித்ரம் தராம்யஹம் பர்த்து ! ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா !! பொருள் - அன்னையே ! எனது கணவரின் நீண்ட ஆயுளைக்கருதி மஞ்சள் கயிற்றினை (சரட்டைக்) கழுத்தில் கட்டிக் கொள்கிறேன் .. நீ சந்தோஷத்துடன் இருந்து அருள்புரிவாயாக ! என்னும் ஸ்லோகத்தைச் சொல்லி பெண்கள் கழுத்தில் கட்டிக்கொள்ளும் நோன்பு மஹா உன்னதமான விரதமாகும் .. ”மாசிக் கயிறு பாசி படியும்” (விருத்தியாகும்) என்பர் .. சாவித்திரியின் வரலாற்றை இன்று படிக்கவேண்டும் .. “தீர்க்க சுமங்கலி பவ” - வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY .. MAY THE GODDESS KAAMAAKSHI BLESS YOU FOR A LONG LIFE .. BEST HEALTH .. AND HAPPINESS .. " JAI MATA D

No comments:

Post a Comment