அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ‘ மாசிமகம் ‘ எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் .. மாசிமாதம் வரும் “மகம்” மிகவும் பிரசித்திப் பெற்றது .. இந்தநட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும் .. மோட்சத்தையும் அள்ளித் தரும் வல்லமை உள்ளவர் .. மங்களகரமான மாசிமாதத்தில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது .. இந்நாள் எல்லா தெய்வங்களுக்கும் மிகவும் உகந்த நாளாகும் கோவில்களில் சிவன் .. விஷ்ணு .. முருகன் .. ஆகிய மூவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் .. யாகங்கள் .. உற்சவங்கள் .. நடைபெறுகின்றன .. உமாதேவியார் அவதாரம் செய்த நாளாகவும் .. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொணர்ந்த நாளாகவும் .. சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாகவும் .. மாசிமகம் திகழ்கிறது .. இந்தப்பிறவிப் பெருங்கடலைக் கடந்து பிறவா வரம்வேண்டி இறைவனின் அருட்கடலை வேண்டும் நாள்தான் இந்நாள் .. ஆகையால் தான் மோட்சத்தை அருளக்கூடிய கேதுபகவான் நட்சத்திரமான மகத்தில் இந்தநாள் அமைகிறது .. இதனை “கடலாடும்நாள்” என்றும் .. “தீர்த்தமாடும் நாள்” என்றும் சொல்வார்கள் .. இந்நாளில் குலதெய்வ .. இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானங்களைச் செய்வது விசேஷம் ..தர்ப்பணம்.. பிதுர்க்கடன் .. ஆகியவை செய்தால் அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை .. தேவாரம் .. திருவாசகம் .. காயத்ரிமந்திரம் .. கந்தசஷ்டிகவசம் ராமாயணம் .. மகாபாரதம் .. கந்தபுராணம் .. விஷ்ணுபுராணம் .. போன்ற புத்தகங்களைப் படிப்பது பலன் கொடுக்கும் .. இன்று சிவபெருமானையும் .. ஸ்ரீவிஷ்ணுபகவானையும் .. பித்ருக்களையும் வணங்கினால் சகலநலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும் .. வாழ்க வளமுடனும் நலமுடனும் .. WISH YOU ALL A VERY HAPPY MORNING AND A BLESSED WEDNESDAY TOO.. MAY GOD BLESS YOU AND GUIDES YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment