அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமுமாகும் .. பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்தபயனை அளிக்கும் .. மாலை 4.30 - மணிமுதல் 6.00 மணி வரையிலான நேரமே பிரதோஷ காலமாகும் .. இந்தநேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை .. பிரதோஷம் என்றால் என்ன ..? .. சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான் .. தேவர்களும் அசுரர்களும் போட்டி போட்டுக்கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் .. ஐராவதம் .. காமதேனு .. கௌஸ்துபமணி .. முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின .. லக்ஷ்மியைத் திருமாள் ஏற்றுக்கொண்டார் .. மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக்கொண்டனர் .. ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது .. இதனைக்கண்டு தேவர்களும் முனிவர்களும் பெரிதும் நடுங்கினர் .. உயிர்களைக்காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார் தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக் கண்ட அன்னை பார்வதிதேவி தன் கரங்களால் அவரைத்தொட விஷம் சிவனின் நெஞ்சுக்குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார் .. இந்த காலம்தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது .. இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும் .. நந்திதேவரது தீபாராதனைக்குப்பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும் .. “ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ஸித்தார்த்தஹ் ஸித்தஸாதக ! பிக்ஷுச்ச பிக்ஷுரூபச்ச விபனோம்ருது ரவ்யயா “ !! .. இந்தஸ்லோகத்தை பிரதோஷ காலத்தில் 18 முறை பாராயணம் செய்து வந்தால் சிவன் அருள்கிட்டி நினைத்தது நிறைவேறும் .. சிவனைப்போற்றுவோம் சகலதுன்பங்களும் நீங்கப்பெற்று மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வோமாக ..” ஓம் நமசிவாய ” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE BE WITH YOU IN EACH STEPS YOU TAKE NOW AND FOREVER MORE .. HAVE A SUCCESSFUL DAY TOO ..

No comments:

Post a Comment