அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானைத் துதித்து தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் .. இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. ” ஓம் அகத்தீசாய நம ஓம் நந்தீசாய நம ஓம் திருமூலதேவாய நம ஓம் கருவூர்தேவாய நம ” .. சிவனின் ஐந்து முகங்கள் - 1- சத்யோ சோதம் - படைத்தல் 2- வாமதேவம் - காத்தல் 3- அகோரம் - அழித்தல் 4- தற்புருடம் - மறைத்தல் 5- ஈசானம் - அருளல் .. இம்முகத்தின் மூலம் ஆகம இரகசியப் பொருளினைக் கேட்டு அறிந்தனர் முனிவர்கள் .. பொதுவாக ஐந்து முகங்களைக் கொண்டு அறியப்படும் சிவன் இரண்டு முறைகள் மட்டும் மறைத்து வைத்திருக்கும் ஆறாவது முகத்தை வெளிப்படுத்தி உள்ளார் .. குருமூர்த்தியின் கோலத்தில் தான் முனிவர்களுக்கு காட்சிதந்த போதும் .. சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது .. தான் மங்களகரமாகவும் .. தன்னைச்சார்ந்தவர்களையும் மங்களகரமாக்குபவரும் சிவனே ! .. சிவனைப்போற்றுவோம் !அனைத்து சம்பத்துக்களும் பெறுவீர்களாக ! “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. .. MAY THE ALMIGHTY LORD SHIVA BLESS YOU ALL WITH GOOD THINGS AND PERFECT HEALTH .. ' OM NAMASHIVAAYA ' ..

No comments:

Post a Comment